Friday, 28 March 2014

காக்கும் காளி



கோபம் இருக்கும் இடத்தில் குணம் இருக்கும் என்பார்கள்.  குணம் என்றால் எப்பேர்ப்பட்ட குணம்.  அநீதி அக்கிரமம் இவைகளைக் கண்டால் சீறி எழும் குணம்.  இந்த அநீதி அக்கிரமங்களை அடக்க ஒரு ஆள் இருந்தால் தானே நியாயமும் சந்தோஷமும் நிலவ முடியும்.

அப்பேர்பட்ட சக்தியாக இருந்து நம்மைக் காப்பவளே காளி என்ற சக்தி.  இவளைப்பற்றி விவரிக்க வேண்டுமானால் இவள் என்ன ரூபமானவள் எப்படிப்பட்டவள் என்றெல்லாம் குறிப்பிடவேண்டும். எல்லாமாக வியாபித்து இருப்பவளுக்கு உருவம் ஏது?   நல்ல தேவ சக்திகள், தீய அசுர சக்திகள் இரண்டுக்கும் அவளே காரணம் என்றாலும், இந்த சக்திகளின் மோதல் நாடகம் கட்டுக்கடங்காமல் போய் இந்த நல்லவர்கள் அடியோடு நசித்து விட அவள் அனுமதிக்க மாட்டாள்.