எல்லா மாத்ருகை களும் தன்னுடைய வ்யக்த மூர்திகளாவதால், கானம் செய்பவர்கள் எந்த அக்ஷரக் கோவைகளாலான பதங்கள் அமைந்த ஸாஹித்யங்கள் கொண்ட ஸ்துதி வாஸகங்களைக் கொண்டு எந்த மூர்த்தியைப் பாடினாலும் அவை யாவும் தன் வ்யக்தியை வர்ணிப்பதாகவே ஆவதால், கானம் செய்பவர்கள் யாவரையுமே தானாகவே அநுக்ரஹித்து அவர்களுக்கு ஆனந்தம் அளித்தருளும் சௌலப்யமூர்த்தி.
தன் வித்யோபாசகர்களாகிய யோகிநிகளில் எவரேனும் ஒருவரை பிரத்யக்ஷமாக காளியாகவோ, ஒரு பரிவார தேவதையாகவோ அல்லது சமஷ்டியாக பலரை சக்ர தேவதைகளாகவோ ஆவாஹனம் செய்து, விதிமுறைபடி ஆராதன க்ரமங்கள் நிகழ்த்தி தனக்கு அர்ப்பணம் செய்யும் அன்பர்களை ஆட்கொண்டு அவர்களுடைய ஹ்ருதயத்தில் நிரந்தரமாக ஸாந்நித்தியம் கொண்டு அவர்களுக்கு ஆனந்தம் அளிக்கும் சௌலப்யமூர்த்தி.
தன் பக்தர்கள் தன்னை ஆராதிக்குங்கால் சிறந்த பரிமளம் கொண்ட கஸ்தூரீ கந்த த்ரவ்யத்தை தன் முகத்தில் கன்னத்தில் பொட்டாகச் சிறிதளவு தீட்டியிருப்பதால் நாற்புறமும் ஏராளமான நறுமணம் வீசி அவ்விடத்திலுள்ள எல்லோருடைய மனத்தையும் கவர்ந்து ஈர்ப்பவள்.
எல்லையற்று பரந்து, விரிந்து கிடக்கும் ஆகாச மத்தியில் விரவி, பிரக்ருதியின் செயலால் உருவாகிச் சேர்ந்து இருக்கும் ஆயிரக் கணக்கான அண்டங்களின் கூட்டினுள்ளே அலமந்து, வசமிழந்து சுழன்றுகொண்டிருக்கும் ஜீவக்கூட்டங்கள் கர்ம பலனாக மேலும் மேலும் கர்பாசய பிரவேசமாகவே நிரந்தரமாக ஸம்ஸரித்துக்கொண்டே என்ன செய்வது என்று தோன்றாமல் உழலும் உயிரினங்களின் மீது இரக்கம் கொண்டு ஒரு சிறிதாவது தன்னை நினைக்கும் அகதியான ஜீவனின் கருவினுள் தானாகவே சென்று அமர்ந்து அவனது புத்தியை தூண்டி அவனுக்கு ஆத்ம ஜ்ஞானம் ஸ்புரிக்க அநுக்ரஹிக்கும் கருணாமூர்த்தி.
கஸ்தூரி மானிலும் அதனின்று பெறப்படும் சிறந்த பரிமள கந்த த்ரவ்யத்திலும் தன்னை ஆவாஹனம் செய்து ஆராதிக்கும் பக்தனுடைய வழிபாட்டு க்ரமங்களை ஆதரவுடன் ஏற்று அவற்றிற்கு தக்க பலன் அளித்து அனுக்ரஹீக்கும் கருணைக்கடல்.
கர்ணாபர்ணமாக இறந்த இரு யானை குட்டிகளை இரு காதுகளிலும் அணிந்து அந்த சின்னத்தின் மூலமாக யோகியின் பஞ்ச ஜ்ஞானேந்த்ரியங்களுக்கும் அவற்றின் விஷயங்களுக்கும் பஞ்ச தன்மாத்திரைகளுக்கும் தொடர்பு அற்றுப்போன நிலையை ஸூசித்து, தன் வ்யக்த ஸ்வரூபத்தை தரிசித்த அளவில் பக்தனுக்கு தெள்ளிய ஜ்ஞானமும் யோக ஸாதனையும் ஸித்திக்கஅருள்பவள்.