ப்ருதிவீ தத்துவத்தின் வ்யக்த மூர்த்தியான மூலாதார சக்ர தள கமலத்தையே தன் ஸ்வரூபமாகக் கொண்டு தன் பக்தன் தன்னை அதனிலிலேயே முழுமையாக உணர்ந்து த்யானித்து இஷ்ட தேவதா தன்மயத்வம் எய்தி நித்ய சுகம் பெற அருளும் தானிதி.
சிறு கன்னிப்பெண்கள் தன்னை உத்தேசித்து அநுஷ்டிக்கும் காத்யாயனீ வ்ரதம் முதலிய வ்ரதங்களில் பெரிதும் மகிழ்ச்சி அடைபவள். மேலும் ஒரு பக்தன் ஒரு சிறு பெண்ணில் தன்னை ஆவாஹனம் செய்து விதிமுறைப்படி ஆராதித்து அதன் அங்கமாக தன்னை உத்தேசித்து அனுஷ்டிக்கும் வ்ரதங்களில் பெரிதும் மகிழ்ச்சி அடைபவள்.
வரம்பு கடந்து விரிந்து வானப் பரப்பினுள் அடங்கிய பல லோகங்களில் வாழும் ஜீவா சமூஹங்களே தன் பிரதி ரூபங்களாக அமைந்த ஆதாரங்களாகக் கொண்டு, ப்ரப்ஞ்ஜத்தின் ஆட்டமே தன் அசைவுகளாகக் கொண்டு லீலா விலாசமாக இயங்கி மகிழும் விஸ்வரூபிணீ.
வித்யோபாஸனமும் ஆராதன க்ரமங்களும் விதிமுறைப்படி ஸாங்கோ பாங்கமாக நிர்வர்த்தனம் செய்து தனக்கு அர்பணித்து அனன்யமாகத் தன்னிடம் ஸரணம் அடைந்து தன் பக்தனுக்கு கால கதியால் விளையும் பிறப்பு, இறப்பு, மூப்பு, முதலான பரிணாமங்கள் எதுவும் நேரிடாவண்ணம் அவை எல்லாவற்றையும் அறவே ஒழித்து அவன் சீக்கிரமே முக்திபெற அநுக்ரஹிக்கும் ஔதார்ய மூர்த்தி.
இந்த்ரப்ரஸ்தத்திற்கு கிழக்கே பாஞ்சால நாட்டில் கங்கா நதி தீரத்தில் ஸர்மண்வதீ தீரம் வரையிலும் பரவியிருந்த காம்பில்ய நகரத்தில் கோயில்கொண்டருளி உலக மக்களை ஆட்கொண்டு அருள்பவள்.
தானே க்ரியா ஸக்தி ஸ்வரூபிணீ ஆவதால் தன் பக்தர்கள் யாவருக்கும் புத்தியில் ஸ்புரிக்கும் எந்த எண்ணத்தையும் எந்தக் கருத்தையும் மந்த்ர பிரயோகத்தால் செயல்படுத்தி பயன் காணும் மனப்பாங்கும் திறமையும் அருளும் ஜகன்மாதா.