Friday, 3 January 2014

ஸ்ரீதக்ஷினகாளிகா ஸஹஸ்ரநாம விரிவுரை (39)


829.   குமாரீவ்ரதஸந்துஷ்டா

சிறு  கன்னிப்பெண்கள் தன்னை உத்தேசித்து அநுஷ்டிக்கும் காத்யாயனீ வ்ரதம்  முதலிய வ்ரதங்களில் பெரிதும் மகிழ்ச்சி அடைபவள்.  மேலும்  ஒரு பக்தன் ஒரு சிறு பெண்ணில் தன்னை  ஆவாஹனம் செய்து விதிமுறைப்படி ஆராதித்து  அதன் அங்கமாக தன்னை உத்தேசித்து அனுஷ்டிக்கும் வ்ரதங்களில் பெரிதும் மகிழ்ச்சி  அடைபவள்.

830.   குமாரீரூபதாரிணீ

தான் ஸந்தர்பங்களுக்கு ஏற்ப பல்வேறு ரூபங்கள் எடுத்துக் கொள்பவள் ஆயினும் ஒரு சிறு கன்னிப்பெண் உருவம் ஸ்வீகரித்துக்கொள்வதில்  பெரிதும் மகிழ்ச்சி கொள்பவள்.

831.   குமாரீபோஜனப்ரீதா

சிறு கன்னிப்பெண்ணில் தன்னை  ஆவாஹனம் செய்து  விதிமுறைப்படி ஆராதித்து அவள் மனதுக்கு த்ருப்தியாக பலவகை  வஸ்த்ர  பூஷணாதிகள்  கொடுத்து பலவகை பக்ஷ்யபோஜ்யங்கள்  கொடுத்து ஸந்தர்பணை  செய்யும் தன் பக்தனை  ஆட்கொண்டு அருள்பவள்.

832.   குமாரீ

மனிதனின்  மனம், வாக்கு, காயம்  ஆகிய த்ரிகரணங்கள் எந்த வகையிலேனும்  காம க்ரோதாதிகளின் வ்ருத்தியின்  விளைவால்  துஷ்க்ருத்யம்  ஏற்பட்டு  கெட்டுவிட்டால், அவனை அந்த கஷ்டத்திலிருந்து காப்பது  தேவியால் தான் ஸாத்யமாகும்.  அதனால் அவளுக்கு குமாரீ என்று பெயர்  ஏற்பட்டது.

833.   குமாரதா

பூர்வத்தில்  ஸூரபத்மாதி  ராக்ஷஸர்களை அழிக்க  வேண்டிய  அவஸரம் நிர்பந்தமாக ஏற்பட்டபோது ஞானத்தின் சின்னமாக  தனது இடது  மேற்கரத்தில் தரிக்கும் பத்ராத்மஜன் என்ற கட்கத்தின்  அம்ஸமாக ஸ்கந்தனை  தோற்றுவித்து அதன் மூலமாக லோகங்களை ரக்ஷித்து அருளியவள்.

834.   குமாரமாதா

ஸக்தி தத்துவத்தின் ஸ்போடனமாக ஜ்ஞான  ஜ்யோதிஸ்ஸின் வ்யக்த ஸ்வரூபமாக அக்னியிலிருந்து உதித்த மஹாகுருமூர்த்தியாகிய ஸ்கந்த ஸ்வாமி  ஆவீர்பவித்து அருளியமைக்கு மூல காரணமான ஜகன்மாதா.

835.   குலதா

தன் பக்தர்களை குலசந்திரிகா,  குலக்ரமதீபிகா,  குலசூடாமணீ,  குலார்ணவம்  முதலிய ஸாக்த வித்யோபாஸன லக்ஷண க்ரந்தங்களில் விளக்கப்பட்ட லக்ஷணங்களாகிய  ஸதாசாரம், விநயம், தீர்த்த யாத்திரை, முதலிய ஒன்பது சிறப்பிலக்கணங்கள் கொண்ட ஸ்ரேஷ்டமான குலசாதகர்களான  யோகிநிகளாக ஆக்கி அவர்கள் நிகழ்த்தும் ஆராதன க்ரமங்களை  த்ருப்தியாக ஏற்று அவர்களை ஆட்கொண்டு அருளும் வித்யாமூர்த்தி.    

836.   குலயோனி

குல  ஸாதகர்களுடைய  உபாஸன  முறைகளுக்கே மூல காரணமான  ஆதி பராஸக்தி மூர்த்தி.

837.   குலேஸ்வரீ

குலஸாதனா  பக்ததிக்கே  அதிஷ்டாத்ரீ தேவதை.

838.   குலலிங்கா

குஸாதன  பக்ததியின்  மூல  லக்ஷணம்  வ்ய்க்தமாக அமைந்த பரதேவதை.  

839.   குலானந்தா

ஸாதகர்கள்  குழாமாக நிகழ்த்தும் ஆராதன க்ரமங்களில் பெரிதும் மகிழ்ச்சி அடைபவள்.

840.   குலரம்யா

தன் உயிருக்கு  உயிராக இருக்கும் குல ஸாதகர்களான  தன் வித்யோ பாஸகர்களிடத்தில்  எல்லையற்ற  இன்பம் கொண்டவள்.

841.   குதர்க்கத்ருக்

ந்யாயமான  மார்க்கத்துக்கு  புறம்பான வழியில் சிந்திப்பவர்களையும்  வாதிப்பவர்களையும் தடுத்து அவர்கள் அங்ஙனம் துர்மார்க்கத்தில் ப்ரவர்திப்பதைத் திருப்பி அவர்களுக்கு நற்புத்தி ஏற்பட  அருள்பவள்.

842.   குந்தீ

அதர்ம மார்க்கத்தில் தீவிரமாக ப்ரவர்திப்பவர்கள்மீது அடங்கா கோபம் கொண்டு அவர்களை தக்கபடி  தண்டிப்பவள்.

843.   குலகாந்தா

குல ஸாதகர்கள் மீது தனது எல்லையற்ற அன்பைப்  பொழிபவள்.

844.   குலமார்க்கபராயணா

ஸாக்த வித்யோபாஸன மார்க்கங்களில்  மிக ஸ்ரேஷ்டமான கௌலமார்க்க பத்ததிகளை அவலம்பித்து அனன்ய ஸரணாகதி பாவத்துடன் தன்னை ஆராதித்து வழிபடும் தன் பக்தர்களை ஆதரித்து  ஆட்கொண்டு அவர்களுக்கு எளிதில் சீக்கிரம் ஜீவன் முக்தி நிலை ஸித்திக்க  அருளும் அபார கருணைக்கடல்.

845.   குல்லா

தக்ஷினகாளிகையின் ஒரு பரிவார தேவதையாகிய இவள் காலி சக்ரத்தில் தக்ஷினகாளிகைக்கு மிகவும் நெருக்கமாக வீற்றிருக்கும் ஆறு முக்கியமான தேவதைகளில் ஒருத்தியாக அமர்ந்திருக்கிறாள்.  தன்னைப் பார்ப்பது போலவே கண்டு, தனக்கு செய்யும் உபசாரங்கள் அனைத்தையும் அப்படியே அவர்களுக்கும் அற்பணிக்கவேண்டும் என்பது தேவியின் திருவுள்ளம்.        தானும் தன் பரிவார தேவதைகளும் ஒன்றே என்று சிறப்பாக சுட்டிக் காட்டுவதற்காக, அந்த பரிவார தேவதையின் பெயரையே அப்படியே தன் பெயராக, தன் திருநாமமாக  அமைத்துக் கொண்டிருக்கிறாள் தேவி ஸ்ரீ தக்ஷினகாளிகை.

846.   குருகுல்லா

இவளும் தக்ஷினகாளிகையின் ஒரு பரிவார தேவதை. இவளுடைய இந்த நாமத்தையும் தன் பெயராகவே, அடுத்தபடியாகவே அமைத்திருப்பதானது, தனது எல்லா பரிவார தேவதைகளும் சற்றும் பேதமோ தாரதம்யமோ இன்றி எல்லோரும் தன்னுடைய மாற்று வினர்களே என்ற உண்மையை வலியுறுத்துகிறது.

847.   குல்லுகா

காலி சாகரத்தில் ப்ரதிஷ்டையாகி இருக்கும் பரிவார தேவதைகளைத் தவிர வேறு பல்லாயிரக்கணக்கான இதர தேவதைகள், தேவி தக்ஷின காளிகைக்கு உபசாரம் செய்துக்கொண்டு இருக்கிறார்கள்.அவர்களுள்  சிறப்பாக குறிப்பிடத்தக்கவள் இந்த குல்லுகா தேவீ. இவர்களையும்  உபாஸகன் தேவி  காளிகையைப்போலவே ஆராதிக்கவேண்டும்.

848.   குலகாமதா

குல ஸாதகர்கள் விரும்பும் எல்லா  வரங்களையும் வரையாது வழங்கும் பர தேவதை.

849.   குலிஸாங்கீ

பரநாரீ என்றும் பராசக்தி என்றும் சிறப்புப் பெ யர்கள் கொண்ட குண்டலினி ஸக்தியே யோகியின் யோகாப்பியஸத்திற்கு  உரு துணையாக இருந்து கொண்டு அவனது த்யான தாரணைகள் வீறு பெற்று ஸமாதி ஸ்திதி நிலைத்து, ப்ரஹ்மானந்தம் பெருகி, அவன் சீக்கிரமே எளிதில் ஜீவன் முக்தி நிலை அடைந்து நிரந்தர சுகம் எய்த உதவுகிறது.  இந்த பராஸக்தியேதான் ஸாக்ஷாத் தக்ஷினகாளிகையாம்.  இந்த குண்டலினி ஒரு ஸர்ப்பம் போல் இருப்பதால் வஜ்ராங்கீ என்றும் தேவி தக்ஷினகாளிகைக்கு சிறப்புப் பெயர்களாம்.

850.   குப்ஜிகா

காலி சக்ர மேரு பூஜா க்ரம பத்ததி ப்ரகாரம் சக்ரத்தில் ப்ரதிஷ்டை ஆகி இருக்கும் பரிவார தேவதைகளைத் தவிர பல இதர தேவதைகளில் ஒருத்தியான குப்ஜிகா தேவியானவள் சாக்ஷாத் தக்ஷினகாளி தேவியாகவே பூஜிக்கப்பட வேண்டிய ஒரு தேவதையாம்.

851.   குப்ஜிகானந்தவர்த்தினீ

தன்னை குப்ஜிகா தேவியாக ஆவாஹனம் செய்து விதிமுறைப்படி தன்னை ஆராதிக்கும் தன் பக்தனை ஆட்கொண்டு அருளும் பரம சௌலப்யமூர்த்தி.

852.   குலீனா

குலாசார மார்க்கத்தில் ஒழுகி தன்னை விதிமுறைப்படி ஆராதிக்கும் ஸ்ரேஷ்டமான  ஸாதகர்களை  ஆட்கொண்டு அருள்பவள்.

853.   குஞ்ஜரகதி:

யானையைப் போல் கம்பீரமான நடையுள்ள  பேரழகி. /  யோகினியின் க்ரமேண யோக ஸாதனை வாயிலாக மேலும் மேலும் ஆரோஹண க்ரமமாக சென்றடைந்து கடைஸியில் குரு ஸ்வரூபிணியாகத் தன்னை கண்டு ஆனந்திக்க அருள்பாலிக்கும் யோகானந்த மூர்த்தி.

854.   குஞ்ஜரேஸ்வரகாமினீ

பரமேஸ்வரராகிய ஸ்ரீ மஹாகாலருடைய ஹ்ருதய ஸ்தானத்தில் தன் வலப்பாதத்தை வைத்து, தன் பாத தீக்ஷையால் அவருடைய மனஸ்ஸில்  ஸக்தி ஸிவ தத்துவத்தின் த்யானத்தின் வீறுபெற்ற ஓட்டத்தை தூண்டிக்கொடுக்கும் ஸாக்தாநந்தமூர்த்தி.


(அடுத்த பதிவில் தொடரும்)    

No comments:

Post a Comment