980. கோதண்டதாரிணீ
தர்ம ஸ்தபனத்திற்காக துஷ்ட நிக்ரஹ ஸிஷ்ட பரிபாலனம் செய்வதற்காக, பண்டாதி அசுரர்களை ஸம்ஹரிப்பதற்காக துர்க்கையாக அவதரித்து கையில் ததுஸ் தரித்து அவர்களுடன் கோர யுத்தம் செய்து அரக்கர்களை அழித்தருளிய ஈடு இணையற்ற வீராங்கனை.
981. க்ரௌஞ்சா
பாலும் ஜலமும் கலந்திருக்கும் நிலையில் பாலை மட்டும் க்ரஹித்து நீரை நீக்கவல்ல அன்னப் பறவை போல் எந்த ஒரு சூழ்நிலையிலும் ஸாரமான அம்ஸத்தை மட்டும் க்ரஹித்து அஸாரமான விஷயங்களை புறக்கணித்து ஸம்பந்தப்பட்டவர் களில் தார்மிகப் போக்கு உள்ளவர்களை ஆதரித்து அவர்களை ஆட்கொண்டு அருளும் பரமஹம்ஸ குருமூர்த்தி.
982. கௌஸிகா
அபிஷேக அர்ச்சனாதி உபசார வரிவஸ்யா க்ரமங்கள் நிகழ்த்துங்கால் மிக முக்கிய அங்கமாக தயாரித்து அர்ப்பணிக்கப்படும் ஸக்ஷகம் என்ற பான பாத்திரத்தில் விசேஷ விருப்பம் உள்ளவள்.
983. கௌலமார்க்ககா
உத்தம வித்யோபாஸகர்களின் ஆராதன க்ரம ஆசார விசேஷங்களைப் பெரிதும் மகிழ்ச்சியுடன் ஏற்று அவர்களை ஆட்கொண்டு அருளும் காருண்ய மூர்த்தி.
984. கௌலினீ
உத்தம வித்யோபாஸகர்களான குல ஸாதகர்களின் பரம்பரையில் ஒழுகப் பட்டு வந்த அநுஷ்டான ஆசார விசேஷங்கள் ஆதியில் பரமசிவனால் துவக்கப்பட்டுஆசாரிக்கப்பட்டு வந்திருக்கின்றமையினால் அவரே ஆதி கௌலாஸார அநுஷ்டாதா ஆவதால் அந்த அநுஷ்டான ஆசார பத்ததியிலேயே பெரிதும் மகிழ்ச்சி கொண்டு அத்தகைய உத்தம அதிகாரிகளை ஆட்கொண்டு அருள்பவள்.
985. கௌலிகாராத்யா
உத்தம வித்யோபாஸகனாகிய குல ஸாதகர்களால் தம் ஸஹ யோகிநிகளின் புடை சூழ ஸாஸ்த்ர விதிமுறைப்படி ஆராதிக்கப்படுபவள்.
986. கௌலிகாகாரவாஸினீ
உத்தம வித்யோபாஸகர்கலாகிய குல சாதகர்கள் நிகழ்த்தி அர்ப்பணிக்கும் ஆராதன க்ரமங்களில் பெரிதும் மகிழ்ச்சி அடைந்து அவர்களுடைய க்ருஹங்களிலேயே தொடர்ந்து ஸாந்நித்தியம் கொண்டு அங்கேயே நித்யவாசம் செய்து அருள்பவள்.
987. கௌதுகீ
கொஞ்சம் கூட இதர உணர்சிகளின் கலப்படமில்லாத மனதில் பெருவெள்ளம் போல் எப்போதுமே இடையறாது சுரந்து பெருகிக் கொண்டே இருக்கும் ஆனந்தம் பொங்கி வழியும் ஆனந்த மூர்த்தி.
988. கௌமுதீ
மந்த்ர ஸாஸ்தரத்தின் சக்ரவர்த்தியாகிய சந்திரனுடைய ஜ்யோதீஷ்கிரண ஜால வீச்சு பரவலாக நிலவி ஜீவ ஸமூஹங்களை எல்லாம் மகிழ்விக்கும் ஜ்யோத்ஸ்னா என்ற சிறப்புப் பெயர் கொண்ட சந்திரிகா வடிவில் ப்ரகாசிக்கின்ற ஜ்யோதிஸ் ஸ்வரூபிணீ. அதுவும் ஸரத் ருதுவில் அதாவது ஐப்பசி மாதத்திலும் கார்த்திகை மாதத்திலும் நேரும் பௌர்ணமி திதியன்று இரவில் ப்ரகாசிக்கும் பூர்ண சந்திரனின் ஈடு இணையற்ற ஒளியான நிலவு ரூபத்தில் ஒளிரும் ஸரத்சந்த்ரிகா வடிவில் ஜ்வலிக்கும் காந்திமதி.
989. கௌலா
உத்தம வித்யோபாஸகனான ஒவ்வொரு குல ஸாதகனும் தேவதாமயமாகவும் குரு தாதாத்ம்ய சித்தனாகவும் ஆவதால் அவனே காளிகை, அவனே குரு, அந்த அந்த கௌல உபாசகன் நிகழ்த்தும் ஆராதன க்ரமங்களில் எல்லாம் அந்த அந்த உபாஸகனுடைய வ்யக்தியிலேயே ஸாந்நித்தியம் கொண்டு அந்த அந்த யோகினி மயமாகவே மாறிவிடும் தன்மய மூர்த்தி.
990. குமாரீ
எல்லா ஸாக்த மந்த்ரங்களிலும் தானே ஊடுருவி பூர்ண ஸாந்நித்தியம் கொண்டு அந்த அந்த ஸாக்த மந்த்ரோபாசகனாக யோகினி மயமாகவே தானும் தன்மயத்வமாக மாறி அந்த அந்த உபாஸகணை ஆட்கொண்டு அருளும் தாதாத்ம்ய மூர்த்தி.
991. கௌரவார்ச்சிதா
மூலோதாரத்திலிருந்து எழும்பி நாதோபாஸகனின் இதர ஆதாரங்களினூடே பரவி அவன் வாக்கிலிருந்து வெளிக்கிளம்பி பெருகும் மஹாநாத ரூபத்தில் தானே தன்மயமாக இயங்கிக் கொண்டு அவனுக்கு யோகமும் ஆனந்தமும் ஸித்திக்க அருளும் ஹம்ஸ ரூபிணீ.
992. கௌண்டின்யா
முன்னொரு காலம் குண்டின மஹர்ஷியின் கோத்திரத்தில் ஒரு பெண்ணாக ஆவிர்பவித்து அருளியவள்.
993. கௌஸிகீ
பரஹ்பிரம்மத்தின் பாரமாத்மிக ஸக்தி மூர்த்தி.
994. க்ரோதஜ்வாலாபாஸூரரூபிணீ
ரௌத்ர ரஸமே உருவான ஸ்ரீ மஹா காலர் சவம் போல் கிடக்க அவருடைய ரௌத்ர ரச ஸக்தியானது தன்னுடைய வ்யக்தியின் மூலமாக அக்னி ஜ்வாலை ரூபமாக வெளிக்கிளம்பி இந்தப் ப்ரபஞ்சத்தில் ஸம்ஹாரத் தொழில் செவ்வனே நடக்க ஹேதுவாக ப்ரகாசிக்கும் கோ பாக்னி ஸ்வரூபிணீ.
995. கோடி
மாத்ருகா மண்டலமாகிய மணிபீட த்ரிகோணத்தின் த்ருதீயாம்ஸ முனைப்புகளாகிய "அ" கார ஸக்திகளாகிய நிவ்ருதி தேவதையும் அம்ருதா தேவதையும் "க" கார ஸக்திகளாகிய ஸ்ருஷ்டி தேவதையும் காலராத்ரி தேவதையும் " த " கார ஸக்திகளாகிய புத்தி தேவதையும் ஸ்தாணு தேவதையும் மண்டலத்தின் த்ருதீயாம்ஸ கோண கோடி தேவதைகளாக ப்ரதிஷ்டை ஆகி இருப்பதால் அவைகளின் வ்யக்திகளில் தானே ஸாந்நித்தியம் கொண்டு அந்த மூன்று முனைப்புகளில் விசேஷமான மகிழ்ச்சி கொண்டு அங்கேயே எப்பொழுதுமே லீலைகள் பல புரிந்து கொண்டு விலாஸமாக விளங்கும் ஆனந்த மூர்த்தி.
996. காலானலஜ்வாலா
ப்ரளயாக்னியின் ஜ்வாலை போல் ஈடு இணையற்ற அதி ஜாஜ்வல்யமான ஜ்யோதிஸ்ஸுடன் ஜ்வலிப்பவள்.
997. கோடி மார்த்தாண்டவிக்ரஹா
கோடிக்கணக்கான ஸூர்யர்கள்ஒரே இடத்தில் ஏக காலத்தில் உதித்தாற்போல் அபரிதமான ஜ்யோதிஸ்ஸுடன் ப்ரகாஸிக்கும் பரஞ்ஜ்யோதிஸ் ஸ்வரூபிணீ.
998. க்ருத்திகா
அக்னியை அதி தேவதையாகக் கொண்டதும் , ஆறு தாரைகள் கொண்டதும், கத்தியின் உருவம் கொண்டதும் ஆறு என்ற ஸங்க்யையைக் குறிப்பதும் ஆன க்ருத்திகை நக்ஷத்திரத்தை தன் வ்யக்தியாகக் கொண்டு அதனிலேயே பூர்ண ஸாந்நித்தியம் கொண்டு ப்ரகாசிப்பவள், ஆதலின் ஆறு என்ற ஸங்க்யைக்கு உரியவள்.
999. க்ருஷ்ணவர்ணா
சுத்தமான கரியவர்ணத்துடன் ப்ர்காசிப்பவள். யாவராலும் எளிதில் உணரமுடியாதவள். தன் மந்த்ரத்தின் மூலம் எல்லா ஜீவர்களையும் தன் பால் ஈர்ப்பவள்.
1000. க்ருஷ்ணா
நிர்குணத்வம் பரமத்வம் ஆகிய இரு பெரும் லக்ஷணங்கள் படைத்தமையின் பரஹ் ப்ரஹ்மத்தின் வ்யக்த ஸ்வரூபிணீ.
1001. க்ருத்யா
க்ரியா ஸக்தியின் ஸாக்ஷாத் வ்யக்தி மூர்த்தி.
1002. க்ரியாதுரா
ஆராதன க்ரமங்களாகிய பூஜைகளின் அங்கங்களின் விதிமுறைப்படியான அனுஷ்டாநத்திலேயே கண்ணும் கருத்துமாய் இருந்துகொண்டு ஸ்ரத்தையில் சற்றும் சலியாமல் ப்ரேம த்யான பூர்வமாக ஆராதனைகளை நிர்வர்த்தனம் செய்து தனக்கு அர்ப்பணிக்கும் பக்தர்களை ஆட்கொண்டு அருள்பவள்.
1003. க்ருஸாங்கீ
அவளுடைய உண்மையான ஸ்வரூபம் இன்னது தான் என்று சற்றும் யாவராலும் கண்டு கொள்ள முடியாதபடியான அதி ஸூஷ்ம ஸ்வரூபிணீ.
1004. க்ருதக்ருத்யா
தனக்கு இனி கர்த்தவ்யம் அதாவது அவஸ்யம் செய்தாக வேண்டியது என்ற கார்யங்கள் எதுவும் இல்லாதவள். அதாவது ஜீவர்களுக்கு கர்மாவின் விதி முறைப்படியான நிர்வர்த்தனமே ஜ்ஞானத்துக்கு அடித்தளம் ஆகையினால் கர்மானுஷ்டானத்தை ஒழுங்கான முறையில் நிகழ்த்தாத ஜீவனுக்கு' ஜ்ஞானம் ஸித்திக்காது. அத்தகைய நிர்பந்தம் எதுவும் இல்லாத பரமாத்ம ஸ்வரூபிணீ.
1005. க்ர: பட்ஸ்வாஹாஸ்வரூபிணீ
"கம்" பரப்ரஹ்மம் "ரம்" அக்னி, விஸர்க்கம் ( : ) மோக்ஷம் என்றபடி ஜ்ஞானாக்னியின் உதவியால் ப்ரஹ்ம ஸாக்ஷாத்காரம் ஏற்பட்டு அதன் விளைவால் மோக்ஷ ஸித்தியை குறிக்கும் "க்ர : " என்ற பீஜமும் அஸ்த்ர பீஜமாகிய "பட் " காரமும் அக்னியின் ஸக்தியாகிய ஸ்வாஹா காரமும் இணைந்து அங்ஙனமாக " க்ர: பட் ஸ்வாஹா " என்று உருவாகும் மஹா மந்த்ரத்தை ஸக்தி - ஸிவ தத்துவத்தின் ப்ரேம பூர்ண த்யானத்துடன் ஜபிக்கும் பக்தர்களை ஆட்கொண்டு அருளும் மந்த்ர மூர்த்தி.
1006. க்ரௌம் க்ரௌம் ஹூம்பட்மந்த்ரவர்ணா
"கம் " பரப்ரஹ்மம், "ஔம்" ஸாந்தா என்ற ஸக்தி தேவதையுடனும், "ரம்" என்ற அக்னி ஸக்தியுடனும் இணைந்த ஸதாஸிவன் அநுஸ்வாரம், அதாவது பிந்து வாகியதும், வ்யோமரூபா என்ற சிறப்புப் பெயர் கொண்ட சந்த்ரிகையாகிய நாதபிந்து, அதாவது "க்ரௌம்" என்ற பீஜத்தின் "க்ரௌம் க்ரௌம்" என்ற இரட்டிப்பு, "ஹூம்" காரமாகிய கூர்ச்சபீஜம், அஸ்த்ரமாகிய "பட் " காரம், ஆகிய இந்த நான்கு பீஜங்களும் சேர்ந்து "க்ரௌம் க்ரௌம் ஹும்பட்" என்று உருவாகும் சதுரக்ஷரி மஹாமந்த்ரத்தை ப்ரேம த்யானத்துடன் ஜபிக்கும் பக்தர்களை ஆட்கொண்டு அருளும் வித்யேஸ்வரி.
1007. க்ரீம ஹ்ரீம் ஹூம்பட் நமஸ்ஸ்வதா
தக்ஷின காளிகைக்கே உரித்தான "ரஸஜ்ஞா" என்ற பீஜமாகிய "க்ரீம" காரம் "புவனேஸ்வரி" என்ற சிறப்புப் பெயர் கொண்ட ஸக்தி ப்ரணவமாகிய "ஹ்ரீம்" காரம் கூர்ச்ச பீஜமாகிய "ஹூம்" காரம் ஆகிய இந்த மூன்று பீஜங்கள் இந்த க்ரமத்தில் "க்ரீம் ஹ்ரீம் ஹூம் " அதாவது பரிவர்த்தனமான காலீ த்ரிதாரீ , அதன் பின் அஸ்த்ர மந்த்ரமாகிய "பட்" காரம் அதன் மேல் நம: என்ற ஸரண ப்ரணாம மந்த்ரம், அதன் மீது பித்ரு ப்ரீதி மந்த்ரமான " ஸ்வதா " அதாவது "நமஸ்ஸ்வதா" என்ற வாசகத்துடன் இணைந்து அங்ஙனமாக க்ரீம் ஹ்ரீம் ஹும் பட் நமஸ்ஸ்வதா என்று உருவாகும் அஷ்டாக்ஷரி மஹாமந்த்ரத்தை ப்ரேம த்யானத்துடன் ஜபிக்கும் பக்தர்களை ஆட்கொண்டு அருள்பவள்.
1008. க்ரீம் க்ரீம் ஹ்ரீம் ஹ்ரீம் ஹூம் ஹூம் பட் ஸ்வாஹா மந்த்ரரூபிணீ.
க்ரீம் ஹூம் ஹ்ரீம் என்ற காலீ த்ரதாரியின் பரிவர்த்தன ரூபமான க்ரீம் ஹ்ரீம் ஹூம் என்ற மந்த்ரத்தில் அடங்கிய மூன்று பீஜங்கள் ஒவ்வொன்றையும் இரட்டித்து க்ரீம் க்ரீம் ஹ்ரீம் ஹ்ரீம் ஹூம் ஹூம் என்ற ரூபம் அடைவதன் மூலம் ஸக்தி-ஸிவ தத்துவத்தின் ப்ரதிபாதனமாக ஸ்ரீ மஹாகாலரின் ஹ்ருதயத்தின் மேலே நின்ற திருக்கோலமாக உள்ள தன்னுடைய இந்த " ஸர்வ ஸாம்ராஜ்ய மேதா " என்ற சிறப்புப் பெயர் கொண்ட திவ்ய ஸஹஸ்ரநாம ஸ்தோத்ரத்தையே அஸ்த்ரமாக "பட்" என்று ப்ர்யோகிக்கத் தேவையான அக்னி ஸக்தியை "ஸ்வாஹா" கொடுக்கவல்ல இஷ்ட தேவதா தாதாத்ம்யம் அடைவதன் வாயிலாக உபாஸகனுக்கு ஸக்தி-ஸிவ தத்துவ மயமாகவே அதாவது தன் ஸ்வரூபமாகிய தக்ஷினகாளி மயமாகவே உருவாகும் ஸக்தியை தந்தருளும் ஆதி பரா ஸக்தி மூர்த்தி.
ஸ்ரீ ஸர்வ ஸாம்ராஜ்யமேதா என்ற ஸ்ரீ தக்ஷினகாளிகையின் ஸஹஸ்ரநாம ஸ்தோத்திரத்தின் விரிவுரை இத்துடன் முற்றுப் பெறுகிறது.
இந்த மொழிபெயர்ப்பு தமிழ் அறிந்த காலி வித்யோபாஸகர்களுக்கு பேருதவியாக இருக்கும் என்பதினால் இதனை எனது Blog ல் பதிவு செய்துள்ளேன். .
இதன் மூலத்தை அளிக்கக் காரணமாக இருந்த என் மானஸீக குருநாதர்களான ஸ்ரீ ராஜகோபால ஐயர், ஸ்ரீ சங்கர ஐயர், அவர்களுக்கு என் தாழ்மையான வணக்கங்களையும் நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன். மேலும் விமலானந்த மண்டலியை சார்ந்தோருக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
சுபம்
No comments:
Post a Comment