தானே க்ரியா ஸக்தி ஸ்வரூபிணீ ஆவதால் தன் பக்தர்கள் யாவருக்கும் புத்தியில் ஸ்புரிக்கும் எந்த எண்ணத்தையும் எந்தக் கருத்தையும் மந்த்ர பிரயோகத்தால் செயல்படுத்தி பயன் காணும் மனப்பாங்கும் திறமையும் அருளும் ஜகன்மாதா.
மாத்ருகா மண்டலத்தில் அமர்ந்துள்ள ஐம்பத்தொரு மாத்ருகைகள் யாவற்றிலும் இயங்கிக் கொண்டிருக்கும் இனிய நாதமே தன் வடிவமாகக் கொண்டு அவற்றிலேயே எப்போதும் ஊடாடி மகிழும் நாதரூப ஸுந்தரி.
உபாசகனால் ஹ்ருதயத்தில் எப்பொழுதுமே த்யானிக்கப்படுவதால் தன் இயல்பான முழு ஸ்வரூபத்துடனேயே அங்கேயே நித்யவாசம் செய்பவளாகவும், அவன் ஆற்றும் ஆராதனக்ரமங்களில் தானே ஊடுருவி அவற்றிலேயே உறைபவளாகவும், அவன் தன் மந்த்ரத்தையே எப்போதும் ஜபிப்பதால் அவனுடைய புத்தியிலே இடையறாது லீலா விலாசமாக ஸாந்நித்யமாக விளங்குபவளாகவும், இங்கனமாக தன் ப்ரிய பக்தனுடைய எல்லாக் காரியங்களிலும் அவனைச் ஸூழ்ந்தே அன்பு பொங்கி வழிய இன்பமயமாக ஊடாடுபவளான இஷ்ட தேவதை.
மைபோல் கரிய உடல் சாயல் கொண்டவள். அதாவது எவ்வளவு அபாரமான புத்தி கூர்மை உள்ளவனாக இருந்தபோதிலும் யாவராலும் எளிதில் அறிந்து கொள்ள முடியாதபடி ஒரு பெரும் புதிர் போன்ற ஸ்வரூபம் உள்ளவள்.
கர்மபலம் (ஊழ்) , வாசனை பிரதிபந்தம் என்ற எந்த ஒரு கட்டுப்பாட்டுக்கும் அப்பாற்பட்டவள். தன்இச்சையாக வேறு எவருடைய ஏவலும் இல்லாமல் இயங்குபவள். வேறு எந்த தேவதையும் மாத்ருகைகளின் ஒலி ஓட்டத்தின் ஸக்தியை அநுஸரித்தே இயங்க, பராசக்தி ஆகிய தக்ஷின காளிகை மட்டும் மாத்ருகா மணடலத்தின் அதிதேவதை ஆதலால் மாத்ருகைகளைத் தன் விருப்பப்படி இயக்குபவள்.
அரம் மரத் துண்டை அறுப்பது போல் துஷ்டர்களை கடுமையாக தண்டிப்பவளாயினும் நாற்புறமும் சிறந்த நறுமணம் வீசும் தாழம்பூவை ஆபரணமாக அணிவதில் பெரு மகிழ்ச்சி கொள்பவள். அதாவது ஸுவாசனைகள் (பூர்வ்கர்மத்தில் நற்கருமங்கள் பல புரிந்துள்ளதால் உண்டான நற்பண்புகள் மலிந்துள்ள சாதுக்கள் எல்லோரையும் தன் அநுக்ரஹத்தால் மகிழ்வித்து ஆட்கொண்டு அருள்பவள். அதாவது துஷ்ட நிக்ரஹ சிஷ்ட பரிபாலனம் செய்து உலகை ஆண்டருள்பவள்.
ஸிவ தத்துவ ப்ரதிபாதமாகிய வ்ருக்ஷத்தின் மீது ஆரோஹணிக்கும் ஸக்தி தத்துவ ப்ரதிபாதமாகிய "லதா " எனப்படும் சக்தி சிவ தத்துவ ஸ்வரூபிணியாகத் தன் பக்தனின் புத்தியில் ஆவிர்பவித்து, அங்கு தானாகவே ப்ரஹ்மஞான ஜ்யோதிஷ்மதியாகவும் மனோல்லாஸ லாஸ்ய லோலினியாகவும் அமர்ந்து அவனுடைய ஸாதனா க்ரமங்களில் தன் வித்யுத் ஸக்தியை ப்ரசரிக்கச் செய்து அவனை ஒரு ஆதர்ச உபாஸக தல்லஜனாக பிரகாஸிக்கச் செய்து மகிழும் பரமாநுக்ரஹமூர்த்தி.