Wednesday, 25 December 2013

ஸ்ரீதக்ஷினகாளிகா ஸஹஸ்ரநாம விரிவுரை (33)


698.   காம்ஸ்யத்வனிமயீ

வெண்கலத்தின்  இனிய  நாதத்தில்  உறைபவள்

699.   காமஸுந்தரீ

மாத்ருகா மண்டலத்தில்  அமர்ந்துள்ள ஐம்பத்தொரு மாத்ருகைகள்  யாவற்றிலும் இயங்கிக் கொண்டிருக்கும்  இனிய  நாதமே தன் வடிவமாகக்  கொண்டு அவற்றிலேயே  எப்போதும்  ஊடாடி  மகிழும்  நாதரூப ஸுந்தரி.

700.   காமசும்பனா

மாத்ருகா மண்டலத்தில்  அமர்ந்துள்ள ஐம்பத்தொரு மாத்ருகைகளையும் தன் வாயால் மிக ம்ருதுவாகவும் மிக  இனிமையாகவும் உச்சரித்து  அந்த மதுர நாதத்தால்  ப்ரபஞ்சத்தில்லுள்ள எல்லா  ஜீவர்களுக்கும்  பெரு  மகிழ்ச்சி அளித்ருள்பவள். 

701.   காஸபுஷ்பப்ரதீகாஸா

காஸம் என்று அழைக்கப்படும் ஒரு வகைக் கோரைப்புல்லின் புஷ்பம் போன்ற நிறத்தின் சாயல் கொண்டு ப்ரகாசிக்கும் பேரழகி.

702.   காமத்ருமஸமாகமா

ஐம்பத்தொரு மாத்ருகைகள்  யாவுமே  தானே ஆவதால் அந்த மாத்ருகா மண்டலமாகிய கல்ப வ்ருக்ஷத்தின் நிழலை  அணுகும் பக்தர்கள்  (மந்திரங்களை விதிமுறைப்படி  உபாசிப்பவர்கள்) விரும்புவனவற்றை எல்லாம் அவர்கள் விரும்பியவாரே  அளித்தருளும் அபார  க்ரூபா  ஜலதி.      

703.   காமபுஷ்பா

தானே மாத்ருகா புஷ்ப ரூபிணீ  என்று உலகுக்கு  பறை  சாற்றுவாள் போல, காஞ்சியில் காமாக்ஷியாகவும், காமபீடமாகவும், காமரூபமாகவும், காமாக்கியா ஷேத்ரமாகவும்,  காம கலையாகவும்,  காமதேநுவாகவும், காமத்ருமமாகவும்,  காமபாலிநியாகவும்,  காமயோனிமண்டலமாகவும், காமகோஷ்டமாகவும் வடிவம் தாங்கி  ஜீவர்களின் ஸகல வாக்குகளுக்கும் சிறப்பாக மந்திர ஸாஸ்த்ரத்தின்  இயக்கத்திற்கு மாத்ருகைகளே  சர்வாதாரம் என்ற மஹத்தான  தத்துவத்தை  பக்தர்களுக்கி  நிரூபித்து, அவர்களுக்கு  மாத்ருகா மண்டலோபாசனத்தையே தன் வித்யோபாசனத்தின் பிரதானமான செயல்பாட்டுக்ரமமாக  மேற்கொண்டு  அதன் வாயிலாக மிக எளிதாகவும் சீக்கிரமாகவும் பயன்  அடைந்து  உய்ய  வழிகாட்டி அருளும் பரம ஹம்ஸமூர்த்தி.     

704.   காமபூமி:

மாத்ருகைகளின் ஒலி ஓட்டத்திற்கு மூலகாரணமான  நாதத்தின் ஆதார பீடமாகிய மதுரத்வனி ஸக்தி ரூபிணீ.

705.   காமபூஜ்யா

சர்வ வித்யோபாசனத்தின்  ஆதார பீடமாகிய மாத்ருகா ந்யாஸ க்ரமங்களின் அடித்தளமாக,  முதற்படியாக, உபாஸகர்களால்  விதிமுறைப்படி ஆராதிக்கப்பட வேண்டிய அதிஷ்டான  தேவதையாகிய மாத்ருகா  ஸரஸ்வதி ஸ்வரூபிணீ.   

706.   காமதா

பக்தர்கள் தன்னை ஆராதிக்குங்கால் அவர்கள் ப்ரயோஹிக்கும் வைதிக தாந்த்ரீக மந்திரங்களிலும் அடங்கும் பீஜாக்ஷரங்கள் எல்லாம்  மாத்ருகா மண்டலத்திலிருந்து எழுந்தவைகள் ஆதலால்,  அவர்களுக்கு  மாத்ருக ஸரஸ்வதியின் உபாஸநம் விதிவத்தாக  சித்திக்கச்  செய்து அவர்கள் கோரும் வரங்கள் எல்லாம்  அவர்கள் கோரியவாறே  அளித்து அருளும் வித்யா  மூர்த்தி.

707.   காமதேஹா 

சர்வ வாக்குகளுக்கும் ஆதாரபீடமாகிய மாத்ருகா  மண்டலத்தில் அமர்ந்து ஐம்பத்தொரு மாத்ருகைகளின் ஒலி ஓட்டமே  தன் வ்யக்த ஸரீரம் என்ற மஹத்தான தத்துவத்தை நன்கு  உணர்ந்து பக்தன் தன்னை  மாத்ருகா ஸரஸ்வாதியாக ஆவாஹனம் செய்து  தனக்கு அற்பணிக்கும் ஆராதன க்ரமங்களில் பூரண திருப்தி  அடைந்து  அவனை  ஆட்கொண்டு அருளும் வித்யாரூபிணீ.

708.   காமகேஹா

மாத்ருகைகளின் ஒலி ஓட்டத்திலேயே எப்போதும் ஊடாடி உறைபவள்.

709.   காமபீஜபராயணா

மாத்ருகா  மண்டலத்தில் அமர்ந்த ஐம்பத்தொரு  மாத்ருகைகளின் அந்த அந்த சக்திகளின் சேர்க்கைகளால்  அமைந்த மாத்ருகைக்  கூட்டுக்களாகிய  பீஜங்களே தன் வ்யக்த ஸரீரம்  என்ற மஹத்தான  உண்மையை உணர்ந்து அவற்றிலேயே தன்னை ஆவாஹனம் செய்து விதிமுறைப்படி ஆராதித்து வழிபடும் பக்தர்களை  ஆட்கொண்டருளும் வித்யாமூர்த்தி. 

710.   காமத்வஜஸமாரூடா

அ-க-ச-த-ப-ய-ஸ என்ற அஷ்டவர்கங்களில் அடங்கி விரவியுள்ள அ காராதி 
 ஷ காராந்தமான ஐம்பத்தொரு மாத்ருகாக்ஷரங்கள் அத்தனை  பரிவார  சக்தி தேவதைகளாக விந்யாஸமாகி பிந்து ஸ்தானத்தில் தன்  வ்யக்தி யாக  பிரதிஷ்டை  செய்யப்பட்ட ரஸஜ்ஞா  என்ற  க்ரீம்  காரமே  தன் சின்னமாகப் பொறிக்கப்பட்ட கொடியாகக் கொண்ட காலி சக்ரமாகிய  இரதத்தில் அமர்ந்து  பக்தனுடைய   சித்தத்திலும் சஹஸ்ரார  வீதியிலும் ஸஞ்ஜரிக்கும் வீர மாதா.  

711.   காமத்வஜஸமாஸ்திதா     

அ-க-ச-த-ப-ய-ஸ என்ற அஷ்டவர்கங்களில் அடங்கியுள்ள அ காராதி  ஷ காராந்தமான ஐம்பத்தொரு மாத்ருகாக்ஷரங்களில்  பிரதிஷ்டை யாகியுள்ள பரிவார  சக்தி  தேவதைகளின் வ்யக்திகளிலேயே  தானே பரிபூர்ண  ஸாந்நித்யம் கொண்டு  விளங்குவதால், சக்ர  மேருவில் தன்னை  ஆவாஹனம் செய்து ஆராதிக்கும் பக்தனை ஆட்கொண்டு ஆளும் பராசக்தி மூர்த்தி.

712.   காஸ்யபீ

சக்ர மேருவை தாங்கும் கூர்ம பீட ஸக்தியாக  ஊடாடி இந்தப்  பரந்த ப்ரபஞ்சத்திலுள்ள எல்லா  அண்டங்களையும் தாங்கிக் காத்தருளும்  கருணாமூர்த்தி.

713.   காஸ்யபாராத்யா

ப்ரஹ்மாவின் மானஸப் புத்திரர்  மரீசியின்புத்திரர், கஸ்யபரின்  வம்ஸத்தில் தோன்றிய  காஸ்யப மஹ்ர்ஷியினால் பூர்வத்தில் மிக விமரிசையாக ஆராதிக்கப்பட்டவள்.

714.   காஸ்யபானந்ததாயினீ

பூர்வத்தில்  காஸ்யப மஹர்ஷியினால் வெகு விமரிசையாக ஆராதிக்கப்பட்டு, அதனில் பெரு மகிழ்ச்சி கொண்டு அவருக்குப்  பேரானந்தம்  அளித்தருளிய பெருந்தகை.

715.   காலிந்தீஜல ஸங்காஸா

யமுனை நதியின் ஜல ப்ரவாஹத்தால் தோன்றும் கரிய சாயலுடன் ப்ராகாஸிக்கும்பேரழகி.

716.   காலிந்தீஜலபூஜிதா

யமுனா  நதி தீர்த்தத்தால் அபிஷேகாதி  ஆராதனைகள் செய்து வழிபடும் பக்தர்களை ஆட்கொண்டு  அருளும் பெருவள்ளல்.

717.   காதேவபூஜாநிரதா

தானே நிர்குண ப்ரஹ்மம் ஆயினும் கருணாரஸ ப்ரவாஹமேலீட்டால் ஸகுண  ப்ரஹ்ம ஸ்வரூபிணி ஆனதாலும் தன்னுடைய ஸக்தி ஸ்போடத்திற்கு ஸிவம்  அதீனமாகிவிட்டதாலும், தன்னை அந்த அவசரத்திலேயே, அதாவது ஸக்தி- ஸிவ  தத்துவ வ்யக்தியிலேயே ஆராதித்து வழிபடும்  பக்தர்களை ஆட்கொண்டு அவர்களுக்கு ஜ்ஞானமும்  ஆனந்தமும்,ஜீவன்முக்தியும் அளித்து அருளும் அவ்யாஜ கருணாமூர்த்தி. 

718.   காதேவபரமார்த்ததா

சக்தி- சிவ தத்துவத்தை  அடித்தளமாகக் கொண்டு அமைந்த வித்யாராஜ்ஞீ  உபாஸன பத்ததி ப்ரகாரம் பூர்ண தீக்ஷை ஏற்று ஸக்தி பிரதான்யமான  க்ரமமாக தன்னை ஆராதிதித்து  அனன்ய சரணமாக வழிபடும்  பக்தர்கைள  ஆட்கொண்டு, அவர்களுக்கு  ஸத்யோமுக்தி அளித்து,  அவர்கள் ஜீவன் முக்தர்களாக சிர காலம் சுகமாகவும் கம்பீரமாகவும், இவ்வுலகில் ஸ்வச்சந்தமாக  சஞ்சரித்துக் கொண்டும் பலவகைகளிலும்  லோபோககாரம் செய்துகொண்டு சிறந்த யோகினி மண்டலத்துக்கு வழிகாட்டியாக மகிழ்ச்சியுடன்  வாழ்ந்து, கடைசியில் தன் பதம் அடைய அருளும் பரம கருணாமூர்த்தி.   


(அடுத்த பதிவில் தொடரும்) 

No comments:

Post a Comment