513. கங்காலமோஹநிரதா
தன் வலப்பாகத்தில் ப்ரதிஷ்டை ஆகிஇருக்கும் ஸர்வலோக மஹோபதேசகரான மஹாகாலரை பரிபூரணமாகத் தன் வசப்படுத்தி மோஹ நிர்த்தூதரான அந்த யோகீஸ்வரரைத் தன் மாயையால் தன் விஷயத்தில் மட்டும் மோஹம் அடையச் செய்யும் த்ரைலோக்யமோஹனகரீ.
514. கங்காலமோஹதாயினீ
எப்பொழுதுமே தன் வசமாகியிருக்கும் ஸகலலோக மஹா குருவும் ஸ்திதப்ரஜ்ஞரும் ஆன மஹாகாலரின் ப்ரஜ்ஞையின் ஸ்தைர்யம் ஒரு நாளும் ஸ்காலித்யம் அடையவொட்டாமல் அவருக்குத் தன் மாயா ப்ரஸாரத்தால் நேரக்கூடிய யத்கிஞ்சித் மோஹகதியை நிவாரணம் செய்தருளும் ஜகன்மாதா.
515. கலுஷக்னீ
உலக மக்களை துன்புறுத்தும் பாபிகளை அழித்தருள்பவள்.
516. கலுஷஹா
தன் பக்தர்களை ஹிம்ஸிக்கும் காமக்ரோதாதி அரிஷ்டவர்கங்களையும் ஜன்ம ஜன்மாந்திர ஸஞ்சித ப்ராரப்தாதி பாபங்களையும் விரட்டிஅடிக்கும் ஆபத்ஸஹாயமூர்த்தி.
517. கலுஷார்த்தவிநாசினீ
பூர்வ கர்ம பலன்களாகவும், காமக்ரோதாதிகளின் பாதைகளாலும், துர்ஜன ஸங்கத்தாலும், தன் பக்தர்களுக்கு விளையக்கூடிய கஷ்ட நஷ்டங்களையும், அதிர்ச்சிகளையும், வ்யாகுலங்களையும், நீக்கி அவர்களுக்கு ஸத்ஸங்கமும் ஸத்கர்மானுஷ்டான ஸ்ரத்தையும் மனஸ்ஸாந்தியும் தேவதா ஆராதன வீர்யமும் வழங்கி அவர்களை உத்தம யோகினிகளாக்கி அருளும் பரம கருணாமூர்த்தி.
518. கலிபுஷ்பா
மஹாகோர பாப ஸங்குலமான இந்தக் கலியுகத்தில் தன் ப்ரேம பக்தர்களுக்கு புண்ய கோடியும் ஜ்ஞானமும் ஆனந்தமும் வரையராது வழங்கி அவற்றால் அவர்களை ஜாஜ்வல்யமாக ப்ரகாசிக்க அருளும் விராட் ஸ்வரூபிணீ.
519. கலாதானா
நிர்குண ப்ரஹ்மம் குணங்கள் ஏற்று ஸகுணம் ஆகும்போது ப்ரக்ருதியின் இயல்புகளாகிய பலவகை கலைகளை எடுத்துக்கொள்வதினால் ப்ரக்ருதி தர்மங்கள் விக்ருதி தர்மங்களாக பரிமணிக்கும் நிலையில் தனது மூலப்ரக்ருதியின் ஸ்வரூப ஸ்வயநிலைகள் மாறி, விக்ருதி லக்ஷணங்களான கலாமண்டல ஸமுதாயங்களைப் பிரயோகித்து ஸ்வயம் ப்ரகாசமாகவும் ஸ்வச்சந்தகமாகவும் இயங்கி ப்ரபஞ்சத்தின் பஞ்ச க்ருத்யங்களைச் செய்து அருளும் ஆதிபராசக்தி மூர்த்தி.
520. கஸிபு:
எல்லா அண்டங்களிலும் வாழும் எல்லா ஜீவர்களுக்கும் தானே தாயார் ஆவதால் அவர்கள் யாவர்க்கும் உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க இடம், அவர்கள் நிலைக்குத் தக்கவாறு வழங்கி அருளும் ஜகன்மாதா.
521. கஸ்யபார்ச்சிதா
ப்ரஹ்மாவின் மானஸ புத்திரரான மரீசியின் புதல்வரும், தக்ஷப்ரஜாபதியின் பெண்களான அதிதி, நிதி, ஆகியோரின் கணவரும், மஹோந்நத தேவருஷியும், இந்த ப்ரபஞ்சத்தில்தோன்றி இருக்கும் தேவாஸூர, மனுஷ்ய, பசு, பக்ஷி,ம்ருக ஸரீஸ்ருபக்ருமி கீடாதி ஜீவவர்க்கங்களுக்கும் பிதா மஹருமான கஸ்யப பிரஜாபதியால்ஆதியில் மிக வைபவமாக ஆராதிக்கப்பட்டவள்.
522. கஸ்யபா
இந்தப் பரந்த ப்ரபஞ்சத்தின் சின்னமாகிய சக்ர மேருவின் ஆதாரமான கூர்ம பீட சக்தி தேவதைகளின் வ்யக்திகளாக ஆவிர்பவித்து சகல ஜீவ லோகங்களையும் தாங்கி அருளும் ஜகன்மாதா.
523. கஸ்யபாராத்யா
அனன்யமான வலிமை படைத்த கூர்ம பீட சக்தி தேவதைகளான ஜயா, விஜயா, முதலிய ஒன்பது தேவிமார்களால் மஹா வைபவங்களுடன் ஆராதிக்கப்படுபவள்.
524. கலிபூர்ணா
தர்மத்துக்கும் அதர்மத்துக்கும் இடையே நேரக்கூடிய போராட்ட எதிர்ப்புகளில் தர்மத்தின் பக்கத்தில் தன் சக்திகளை நிறைவாக ப்ரசரிக்கச் செய்து கடைசியில் தர்மமே வெல்லும்படி அநுக்ரஹிக்கும் கருணாமூர்த்தி.
525. கலேவரா
சப்த தாதுக்களில் சரம தாதுவான அதாவது கடைசியானதாக நிர்ணயிக்கப்பட்டிருக்கும் சுக்ரத்திநின்று உத்பத்தியான இந்த நஸ்வரமான சரீரத்திலும் மிகச் சிறந்த சக்தியான தன்னுடைய வித்யுத் சக்தியை ப்ரசரிக்கச்செய்து இந்த துர்ப்பலமான (நலிந்த கருவியை)ஸாதனத்தைக் கொண்டே சாதகர்களை மகத்தான நிஷ்காம்ய கர்மாக்களை அனுஷ்டிக்கச் செய்து அவன் அதன் வாயிலாக ஊழின் விளைவுகளைக் கரைத்து சுத்தி ஸம்ஸ்காரம் ஏற்று முக்தி பெற அநுக்ரஹிக்கும் பராசக்தி மூர்த்தி.
526. கலேவரகரீ
கர்மானுஷ்டானமே ஜ்ஞானோத்பத்திக்கு காரணமானதாலும் அந்தக் கர்மாவை அனுஷ்டிப்பதற்கு ஒரு தக்க உபகரணம் தேவையானதாலும் இந்த ஸரீரமே அதற்கு பல வகைகளிலும் தகுதியானதும், இன்றியமையாததுமான கருவியாக அமைவதாலும் அவனவனுடைய பூர்வ கர்மானுகுணமாக ஜீவனுக்கு ஒரு மஹோபகாரமாக ஸப்த தாதுக்களாலான இந்த தேஹத்தை ஒரு சிறந்த கர்மஸ்தானமாக அளித்தருளியுள்ள ஜகன்மாதா.
527. காஞ்சி
க்ரியா சக்தியே ஸக்தி -ஸிவ தத்துவத்தின் ப்ரதான ப்ராணாலியாக இயங்குவதாலும் கரங்களே மனிதனுக்கு பாஹ்யகார்ய கரண அங்கமாக அமைவதாலும், சவங்களின் கரங்களாலான மேகலையைத் தன் கடி ப்ரதேசத்தில் மாதர் அரைப்பட்டிகை அணியாக அணிந்து, அதன் மூலமாக கர்ம, ஞான பக்தி யோகங்களின் சமஷ்டி ஸாதனமே முக்திக்கு உத்தம மார்க்கமாகும் என்ற பேருண்மையை ஸாதகனுக்கு சுட்டிக் கட்டும் ஜ்ஞானாம்பிகை.
528. கவர்க்கா
வித்யாராஜ்ஞியின் பீஜ வர்க்கங்களில் அமர்ந்துள்ள வ்யங்க்ய ஸக்தியாகிய "க்ரீம் ஹூம் ஹ்ரீம்" என்ற பீஜாக்ஷர த்ரிதாரியிலும் வ்யக்த ஸக்தியாகிய "காலிகே" என்ற நாமாக்ஷர த்ரிதாரியிலும் ப்ரதானமானதும், ஆத்யமானதும் மூல மாத்ருகையாக பிரதிஷ்டையாகி இருப்பதுமான ' க' காரத்தில் தன் வித்யுத் ஸக்தியின் வ்யக்தியுடன் பூரண ஸாந்நித்தியமாக இருந்துகொண்டு அந்த த்ரிபுடியை விதிமுறைப்படி அநுஸந்திக்கும் ஸாதகனை உய்வித்து அவனுக்கு சீக்கிரமே எளிதாகவே முக்தி ஸித்திக்க அருளும் க்ருபைக்கடல்.
529. கராலகா
துஷ்கர்மிகளுக்கு மிக பயங்கரமானவள். தன் பக்தனின் எதிரிகளாகிய காம க்ரோதாதிகளை அழிப்பதில் மிகக் கடுமையனவள்.
530. கராலபைரவாராத்யா
பூர்வத்தில் தன்னால் இயற்றப்பட்ட காளிதந்திரம், பைரவயாமலம் போன்ற பல தந்திர பேதங்களில் ஒன்றாகிய கால பைரவதந்திரம் என்ற தந்திர நூலில் கூறப்பட்டுள்ள விதிமுறைகளின்படி நிகழ்த்தப்படும் ஆராதனக் க்ரமங்களில் பெரிதும் த்ருப்தியும் மகிழ்ச்சியும் கொள்பவள்.
531. கராலபைரவேஸ்வரி
உலகத்தாருக்கு முதல் முதல் காளி வித்யா உபாஸன பத்ததியை உபதேசித்து அருளியவரும் வித்யராஜ்ஞி மஹா மந்த்ரத்தின் ருஷீஸ்வரருமான காலபைரவராலும் அவருடைய சிஷ்யர்களாகிய சஹ யோகிநிகளாலும் விதிமுறைப்படி வெகு விமரிசையாக ஆராதிக்கப்பட்ட விஸ்வேஸ்வரி.
532. கராலா
தன்னுடைய ஸ்ருஷ்டியால் உத்பத்தியாகிப் பெருகியுள்ள இந்த்தப் பரந்த ப்ரபஞ்சத்தை நிர்வஹிக்கும் காரியங்களுக்கு இடயூரானவர்களையும் தன் பக்தர்களின் சத்ருக்களாகிய அரிஷ்ட வர்க்கங்களையும் நாஸம் செய்வதில் மிக பயங்கரமானவள்.
533. கலனாதாரா
மோக்ஷ ஸாதானமாகிய பரம ஸுகத்தைத் தரவல்ல ப்ரம்ம ஞானத்தைத் தன் பக்தனுக்கு வழங்கி அவன் சீக்கிரமே முக்தி பெற அருளிமகிழும் பெருவள்ளல்.
534. கபர்த்தீஸவரப்ரதா
ஸப்த மோஷப்புரிகளுள் ஒன்றாகிய காஸி ஷேத்ரத்தில் ப்ரதிஷ்டையாகி இருக்கும் ஜடாமண்டலதாரியான விஸ்வநாதருடைய பத்தினியாகிய அன்னபூர்ணாவாக ஆவிர்பவித்து அவருக்கு த்ருப்தியும் ஸந்துஷ்டியும் சாந்தியும் வழங்கி மகிழும் பராசக்திமூர்த்தி.
535. கபர்தீஸப்ரேமலதா
யோகியர் தலைவரான மஹாகாலர் யோகம் செய்யுங்கால் அவருடைய மூலாதார சக்ரத்திலிருந்து எழும்பி மேல் நோக்கி கிளம்பும் குண்டலினியின் ஸக்தியின் வ்யக்தியாகதானே அமர்ந்து எல்லாத்தளங்களினூடே ஊடுருவிப் பாய்ந்து அவருடைய ஸஹஸ்ரார மத்தியில் தானே பர குண்டலினியாக இயங்கி அவருக்கு ஆனந்தம் அளிக்கும் ப்ரேம மூர்த்தி.
536. கபர்த்தீமாலிகாயுதா
ஸகுண ப்ரஹ்ம த்யானத்திலும் நிர்விகல்ப ஸமாதியிலும் ஆழ்ந்து ப்ரவர்த்திக்கும் ஹம்ஸ யோகத்தின் ஆதாரமான மாத்ருகா மண்டலத்தின் சின்னமாக ஐம்பத்தொரு யோகிநியர்களின் சிரங்கள் கோத்த மாலையைத் தன் கண்டத்தை சுற்றி தரிக்கும் யோகீஸ்வரி.
(அடுத்த பதவில் தொடரும்)
No comments:
Post a Comment