Wednesday, 11 December 2013

ஸ்ரீ தக்ஷினகாளிகா ஸஹஸ்ரநாம விரிவுரை (26)



537.   கபர்திஜபமாலாட்யா

யோகியர்கள் தம் ஸகுணப்ரஹ்ம உபாஸனத்தின் அங்கமான மந்த்ர ஜபத்தினூடே ஜப ஸங்க்யையைக் காப்பாற்றுவான்.  கையில் கணனத்திற்காகத் தரிக்கும் அக்ஷமாலையின் வ்யக்தியில் தானாகவே அமர்ந்து உறைந்து ஸாதகனின்  ஜபயஜ்ஞத்தைக் காத்துக் கொடுத்து தன் பக்தனுக்கு முக்தி அளிதருளும் யஜ்ஞஸ்வாமினீ.

538.   கரவீரப்ரஸூனதா

உபாஸகனுடைய யோக ஸாதனத்தில்அவன் குண்டலினியின் ஸஹாயத்தால் மஹா ஸ்மஸானமாகிய ப்ரஹ்மரந்த்ர ஸ்தானத்தை அடைந்தவுடன்அங்கு ப்ரதிஷ்டை ஆகியிருக்கம் மணி பீட மண்டபத்தில் உள்ள  மாத்ருகைகளின் ஒலிஒட்டத்த்தின்  ப்ரயோகம் அவனுக்கு ஸித்திக்கும்படி அநுக்ரஹித்து அவனுக்கு ப்ரம்மஞானமும் முக்தியும் அருளி மகிழும் மந்த்ர மாத்ருக ஸ்வாரூபிணீ.

539.   கரவீரப்ரியப்ராணா

தனது இடது மேற்கரத்தில் தன் உயிருக்கு உயிராகத் தான் தரித்து மகிழும் "பத்ராத்மாஜன்" என்ற கட்கத்தை ப்ரேமையுடன் ஆஸ்ரயித்து ஆராதிக்கும் ஸாதகனை தன் ப்ராணனாகவே மதித்து அவனை ஆட்கொண்டு அவனுக்கு ஸத்யோமுக்திஅளித்துஅருளும் அநுக்ரஹமூர்த்தி. 

540.   கரவீரப்ரபூஜிதா

கட்கத்திலேயே தன்னை ஆவாஹனம் செய்து தன்னை விதிமுறைப்படி ஆராதிக்கும் பக்தனைஆட்கொண்டு அவனுக்கு முக்தி அளித்தருளும் ஜகன்மாதா.

541.   கர்ணீகாரஸமாகாரா

ஸஹஸ்ரதள கமலத்தின் மத்தியில் உள்ள பிந்து ஸ்தானமாகிய ப்ரஹ்மரந்திரத்திலேயே தன் பூர்ண ஸாந்நித்தியம் கொண்டு, அதுவே ஸாதகன் பூஜிக்கும் சக்ரத்தின் பிந்து ஸ்தானமானதால் அந்த ஸ்தலத்திலேயே தன்னையும், பத்ராத்மஜனையும், மஹாகாலரையும் ஆவாஹனம் செய்து விதிமுரைப்படி ஆராதிக்கும் தன் பக்தனை ஆட்கொண்டு முக்தி அளித்தருளும் ஜகதீஸ்வரி.

 542.   கர்ணிகாரப்ரபூஜிதா

யோகியர்கள் தம்தம் ப்ரஹ்மரந்திர ஸ்தானத்தில்  ஸகுணப்ரஹ்ம உபாஸனையாக மானசிகமாக நிகழ்த்தும் அந்தர்யாக க்ரமங்களிலும் மற்றும் பல்லாயிரக்கணக்கான ஸாதக கோஷ்டிகள் சக்ர மேரு பூஜைகளினூடே பிந்து ஸ்தானத்தில் நிகழ்த்தும் விதிமுறைப்படியான வரிவஸ்யா க்ரமங்களிலும்  கால்யாதி, ப்ராஹ்ம்யாதி, இந்த்ராதி பரிவார தேவதைகள் தம் தம் பத்ததி ப்ரகாரம் பிந்து ஸ்தானத்தில் நிகழ்த்தும் ஆராதன க்ரமங்களிலும் இப்படியாக  யாவராலும் விமரிசையாக ஆராதிக்கப்படுவதில் பெரு மகிழ்ச்சி அடைந்து  எல்லோரையும் பரிபூரணமாக  அநுக்ரஹித்து அவரவர்கள் கோரிய வரங்களை வரையாது வழங்கி அருளும் கருணைக்கடல்.  

543.   கரீஷாக்னிஸ்திதா

ஹோம குண்ட அக்னியில் ஸாதகன் தன்னை உத்தேஸித்து வேத மந்தரங்களையும்  தன் வித்யாக்ரம மந்திரங்களையும் பிரயோகித்து ஸமித்  ஆஜ்ய  அன்ன  புஷ்பாதிகளைக்  கொண்டு ஆஹுதிகள் பல செய்யுங்கால், அந்த அக்னி ஜ்வாலைகளிலே தானே உறைந்து அமர்ந்து தன் பக்தன் தனக்காக அக்னியில் ஹவனம் செய்யும் பொருள்களை திருப்தியாக ஏற்று அவனைப் பரிபூரணமாக அநுக்ரஹித்து மகிழும் பரம சௌலப்யமூர்த்தி.  

544.   கர்ஷா

எல்லாஅண்ட சராசர சமூஹங்களிலும் உள்ளடங்கிய சகல ஜீவராசிகளுக்கும் தானே, பெற்ற தாய் ஆதலால், மாயையின் விளைவால் தம் தம் பூர்வ கர்மங்களுக்கு அநுகுணமாக ஆங்காங்கு பல்வேறு வகைகளான ப்ரக்ருதிகளாக ஜன்மம் எடுத்து, உய்யும் வழி காணாமல் உழன்று கொண்டிருக்கும் கோடிக்கணக்கான ஜந்துகளை எல்லாம் தன் பால் ஈர்த்து வழிபடுத்தி முக்திப் பாதையில் ஈடுபடுத்திக்கொடுத்து மகிழும் பரம கருணாமூர்த்தி.

545.    கர்ஷமாத்ரா ஸுவர்ணதா

தன் அபார ஈர்ப்பு சக்தியால் தன் பால் வந்து சேர விழையும் மனிதர்களை அவர்கள் தன்னை த்யானிக்கத் தொடங்கிய மாத்திரத்தில் அவர்களுக்கு மந்திரோபதேசமும் சீக்கிரமே ஸித்தியும்  முக்தியும் கைகூட அருளும் க்ருபைக் கடல் . 

546.   கலஸா

பராசக்தியின் ப்ரக்ருதி எல்லை கடந்ததாதலால் அது மஹாகாசமாகும். ஆனால் ஜந்துகளின் ஸரீரத்தில் உள்ளடங்கிய ஹ்ருதய புண்டரீகமத்தியில் ஈஸ்வரன் உலவுவதை உணர்ந்து ஜீவன் ப்ரஹ்மத்தை த்யானம் செய்யுங்கால் அந்த கடாகாச ஸ்தலமே மஹாகாசமாக பரிமணித்து, வரம் பெற்று பரந்து விரிந்து இயங்கும் பரம்பொருள் அணுமாத்ரமான ஹ்ருதய குகையில் வ்யக்தாவ்யக்தமாகவும் ரூபா ரூபமாகவும் ஸ்புரித்து ஸூஷ்மத்ருஸ்யமாக ஜ்வாலிக்கையில் அங்கு தன் ஸகுண வில்க்ஷண ஸ்வரூபத்தை ப்ரசரிக்கச்செய்து, ஜீவன் அதை உணர்ந்து ஜீவப்பிரம்ஹ தன்மைய பாவமும் தாதா த்மிய ஸித்தியும் அடைந்து ஜீவன் முக்தி பெற்று நிரந்தர நிரதிஸயானந்த அநுபவம் பெற்று உய்ய அருளும் காருண்யமூர்த்தி.    

547.   கலஸாராத்யா

எல்லா ஜீவர்களும் தன்னுடைய ஸ்ருஷ்டியே ஆதலால் பாத்திரமான யோகினியின் சரீரத்தில் தன்னை ஆவாஹனம் செய்து விதிமுறைப்படி ஆராதிக்கும் தன் பக்தனை ஆட்கொண்டு அவனை உய்வித்தருளும் ஜகன்மாதா.

548.   கஷாயா

தன் பக்தன் யோகநிஷ்டையில் இருக்கும்பொழுது, இடையில் நேரக்கூடிய மனச் சஞ்சலங்கள் மற்றும் இடையூறுகளால் அவனது யோகத்தின் தொடர்ச்சிக்கு ஊரு விளையாவண்ணம் அவனது புத்தியில் தன் வித்யுத் ஸக்தியை ப்ரஸரிக்கச் செய்து அவனது தாரணையின் த்ருடம் நிலைக்க அருளும் பரம அநுக்ரஹமூர்த்தி.  

549.   கரிகானதா

தன் பக்தனுக்கு வேத ஸம்ஹிதா மந்த்ரங்கள் அஷ்ட விக்ருதி பேதத்தால் எட்டு வகைகளாக கான முறைகளின் ப்ரயோகத்தில் விசேஷத்திறமை அளித்து மகிழும் வேதநாயாகி.

550.   கபிலா

தன் பக்தனின் ஆராதனைகளில் மிக மகிழ்ச்சி கொண்டு அவனுடைய வீட்டில் ஒரு பெண்ணாக அவதரித்து, தன் லீலா வினோதங்களால் அவனுக்கு ஆனந்தம் அளிக்கும் சௌலாப்யமூர்த்தி.

551.   கலகண்டீ

ஈடு இணையட்ற இனிமைகொண்ட த்வனியுடன் தன் அதிமதுரமான பாஷணத்தாலும் கானத்தாலும் கேட்பவர் மனதைக் கவர்ந்து ஈர்க்கும் அபார ஆகர்ஷண சக்தயுள்ள  ஸூநாத விநோதனி.

552.   கலி:

தன் பக்தன் காமக் க்ரோதாதிகளின் மிகக் கொடுமையான தாக்குதல்களை சமாளிக்க முடியாமல் , நமக்கு வேறு கதியே இல்லையா என்று ஏங்கி தன்னிடம் சரணம் அடைவது ஒன்றே கடையாய உபாயம் என்று, தன்னிடம் தஞ்சம் அடைந்தது கண்டு, தன் வித்யுத் சக்தியை அவன் புத்தியில் ப்ரஸரிக்கச் செய்து அவனுக்கு ஞானமும் ப்ரஹ்மானந்தமும் முக்தியும் அளிக்கும் கருணாமூர்த்தி. 

553.   கல்பலதா மதா

பக்தனின்  ஸகல கோரிக்கைகளையும்   கோறியவாறே ஈந்தருளும் கல்பகவல்லீ என்று  கால்யாதி பரிவார தேவதைகளால் எல்லா பக்தர்களுக்கும்   உபதேசிக்கப் பட்டபடி  பக்தனுடைய  மனதில் தோன்றும் சகல விருப்பங்களையும்   அப்படியே  மழை என பொழியும் ப்ரியவர்ஷினி    



(அடுத்த பதிவில் தொடரும்)

No comments:

Post a Comment