உபாசகன் தன் மனத்தில் தான் எந்த முறையில் தேவியை வழிப்பட்டால் தேவி திருப்தி அடைவாள் என்று பூரண மனோபலத்துடன் முயன்று ஆராதித்துக் கொண்டிருக்கும் வேளையில், தேவி தானாகவே முன்வந்து அவனுக்கு பூஜாபலம் அளித்து அவனை மகிழ்விப்பாள் .
மூலமந்திரத்தின் முதல், முக்கிய பீஜமாக உள்ள "ரசஜ்ஞா" எனப்படும் க்ரீம் காரத்தின் ஆத்ய மாத்ருகையாகவும் அஷ்டோத்ம், சஹஸ்ரநாமம் மந்திர கிரந்தங்களில் எல்லா நாமங்களுக்கும் ஆத்யாக்ஷரமாக உள்ள க காரத்தின் விசேஷ சக்தியுடன் ஸாந்நித்தியம் கொண்டு பிரகாசிப்பவள்.
ஸ்ரீ ஸர்வஸாம்ராஜ்ய மேதா என்று அழைக்கப்படும், முற்றிலும் 'க' காரத்தில் துடங்கும், சுந்தரிக்கு சக்தி கொடுக்கும் ஸ்ரீ தக்ஷினகாளி சஹஸ்ரநாம மாலா ஸ்தோத்திரத்தின் தமிழ் விரிவுரை.
Sri Vidya Tantra: Sri Devi Upasana: The Devi upasaana has been described apart from Vedas in Devi bhagawatham, Skaantham, various puranas etc It is also said univocally i...
யோகியர்களின் சிரஸுகளை கோர்த்த மாலையே தனக்கு உகந்த ஆபரணமாக கழுத்தில் அணிந்து மகிழ்பவள். இவ்வண்ணம் அவள் யோகிகளை ஆட் கொண்டு அருளியமைக்கு சின்னமாகும். யோகியர்களின் கரங்களாலான மேகலையைத் தன் கடிப்ரதேசத்தில் அணிந்தும் அதாவது ஜ்ஞானேந்த்ரி யங்களின் சின்னமாக ஸிரஸுகளின் மாலையும் கர்மேந்த்ரியங்களின் சின்னமாக கரங்களின் மாலையையும் அணிந்து மகிழ்பவள் என்பதாகும்.