Friday 8 November 2013

ஸ்ரீ தக்ஷினகாளிகா ஸஹஸ்ரநாம விரிவுரை (2)

30. ககாரவர்ணஹ்ருதையா

மூலமந்திரத்தின் முதல், முக்கிய பீஜமாக உள்ள "ரசஜ்ஞா" எனப்படும் க்ரீம் காரத்தின் ஆத்ய மாத்ருகையாகவும் அஷ்டோத்ம், சஹஸ்ரநாமம் மந்திர கிரந்தங்களில் எல்லா நாமங்களுக்கும் ஆத்யாக்ஷரமாக உள்ள க காரத்தின் விசேஷ சக்தியுடன் ஸாந்நித்தியம் கொண்டு பிரகாசிப்பவள்.

31.ககாரமநு மண்டிதா

க காரத்தை ஆத்ய மாத்ருகையாகக் கொண்ட    "ரசஜ்ஞா"  எனப்படும் க்ரீம் காரம் ஆத்ய பீஜமாக ஸம்புடமான வித்யாராஜ்ஞீ முதலிய எல்லா மந்திரங்களாலும் அலங்கரிக்கப் பட்டவள்.

32. ககாரவர்ண நிலையா  

க காரம் முதலிய 35 வ்யஞ்ஜனங்கள், அ காரம் முதலிய 16 ஸ்வரங்கள் ஆகிய  எல்லா மாத்ரு கைகளிலும் லீலாவிலாசமாக ஊடுரிவிப்பாய்ந்து அவற்றின் ஒலி ஓட்டத்தை வீர்யமாக்கி மகிழ்பவள்.

33. காகசப்தபராயணா

க காரம் ஸம்புடமான  வித்யாராஜ்ஞீ, காளி காயத்த்ரி ஆகிய மஹா மந்திரங்களின் மங்கலமான ஒலிகளின் ஓட்டத்தின் மூலம் மிக எளிதில் அடயத்தக்கவள்.

34. ககார வர்ண முகுடா

க கார மாத்ருகையின் மங்கலமான ஒலி வடிவமே தன் சிரோபூஷணமாகக் கொண்டு பிரகாசிப்பவள்.

35. ககாரவர்ணபூஷணா

தேவியின் முழு ஸ்வரூபமே மூலமந்திரத்தின் வடிவாம். வித்யாராஜ்ஞீயின் பிரதான பீஜமாகிய க்ரீம் காரத்தின் ஆத்ய மாத்ருகையாகிய க காரத்தின் ஒலி ஓட்டமே அவளது வ்யக்தியின் முக்யமான அம்சமாகவும் அதுவே அவளது சிறந்த அணிகலனாகவும் கொண்டு ஜ்வளிப்பவள்.

36. ககாரவர்ணரூபா

க கார மாத்ருகையின் த்வனி ப்ரவாஹத்தை அநுஸந்திப்பதின் மூலமாகவே தன் பூரண ஸ்வரூப தர்சன பாக்கியத்தை உபாஸகர்களுக்கு அநுக்ரஹித்து மகிழ்பவள்.

37. ககஸப்தபராயணா

மந்திரத்தின் ஒலிகளின் ஓட்டத்தில் ஊடுரிவிப் பாய்ந்து மகிழ்பவள்.

38. ககவீராஸ் பாலரதா

வித்யோபாசனத்தில் முழு மனதாக ஈடுபடும் பக்தர்களை மேலும் மேலும் முயற்ச்சித்து சிறந்த குல சாதகர்களாக வளர ஊக்குவித்து மகிழ்பவள்.

39. கமலாகர பூஜிதா

ஏராளமாக தாமரைகள் பூத்த தடாகத்தில் ஆவாஹனம் செய்து ஆராதிக்கப்படுவதில்  பெரிதும் மகிழ்ச்சி  கொள்பவள்.

40. கமலாகரநாதா

ஷடாதார கமலங்கள் வியாபித்த ஜீவ சரீரத்திற்கு ஸ்வாமிநியாக அமர்ந்து ஜீவர்களைக் கர்மாக்களில் இயக்கி அருளும் ஆத்ம ஸ்வரூபிணி.

41.கமலாகரரூபத்ருக்

ஜீவனின் சரீரத்தில் ஒவ்வொரு ஆதார கமலத்திலும் அதனதன் ஸ்வரூபத்தை தானே தாங்கி குண்டலினி ஸக்தியின் வயக்த ஸ்வரூபிணியாக ஸாதகனின் புத்தியில் ஜோதிஸ் ஸ்புரிக்கச் செய்து அருள்பவள்.

42. கமலாகரஸித்திஸ்தா

ஜீவர்களின் சரீரங்களில் ஷடாதார கமலங்களிநூடே இடா பிங்களா நாடிகளின் கதிகளின் பரிவர்த்தனமாகப் பரவிக்கொண்டு ஸூஷும்ணா மார்க்கமாக, உச்ச ஸ்தானமான  சஹஸ்ராரத்தை நோக்கி பரபரப்பாக ஆரோஹணித்துக் கொண்டிருக்கும்  உபாசகனை  மேலும் மேலும் ஊக்குவித்து  அவனுடைய பிரயாசை பூரண சித்தி அடைய அநுக்ரஹிப்பவள்.

43. கமலாகரபாரதா

ஷடாதார கமலங்களின் தளங்களின் கதிக்ரமங்களில் ஒன்றிய நிலையில்  குண்டலினி யோகத்தில்  லயித்துள்ள ஸ்திதியில் இருக்கும் உபாசகனுக்கு எளிதிலும் விரைவிலும் அவனுடைய யோகம் பூரண சித்தி அடைய அநுக்ரஹிப்பவள்.

44. கமலாகர மத்யஸ்தா 

ஷடாதார கமலங்களே முக்ய தளங்களாக  அமைந்த ஜீவர்களின் சரீரங்களின் மத்திய ஸ்தானமாகிய " அநாஹத கமலம் "எனப்படும் ஹ்ருதய கமலமே தன் நிலைய ஸ்தானமாகக் கொண்டு அங்கேயே நிரந்தரமாக உறைந்து மகிழ்பவள்.

45. கமலாகரதோஷிதா

ஜீவர்களின் சரீரங்களில் உள்ள ஷடாதார கமலங்கலாகிய பிரதான தளங்களில் ஊடாடிக் கொண்டே அந்த அந்த ஸ்தானத்துக்குரிய உணர்சிகளுக்கு இலக்காகி ஆங்காங்கு விகல்ப ப்ரஸார  பரிவர்த்தனமாக ஸஞ்சரித்துக் கொண்டு அந்த அந்த ஸ்தலமே அவ்வப்போது தன் உறை விடமாகக் கொண்டு லயித்து பக்தனுக்கு நிரந்தர இன்பம் அநுக்ரஹித்து  மகிழ்பவள்.


(அடுத்த பதிவில் தொடரும்,)





No comments:

Post a Comment