Monday 11 November 2013

ஸ்ரீ தக்ஷினகாளிகா ஸஹஸ்ரநாம விரிவுரை (5)


90. கராமலகஸம்பூஜ்யா

குரு தத்துவமே மகத்தான ஸக்தியாக அமைந்த ஸக்திதத்துவ உபாஸனக் கிரமங்களின் விதிமுறைகள் தெளிவாக  ஸ்புரித்தல் மூலம் ஸாதகன் தேவி வழிபாட்டு சம்பிரதாயத்தில் ஸ்திரமா க நிலைத்து  உய்யுமாறு அநுக்ரஹிப்பவலள்.

91. கராமலகதாரிணீ

குரு தத்துவத்தின் தெளிவான  ஸ்புரணத்தால் ஸாதகன் சீக்கிரமே மந்திர ஸித்தி அடையப்பெற்று மஹா குருவாகவும் பேருபகாரியாகவும் உலகில் கீர்த்தியுடன்  ஸுகவானாக நீண்டகாலம் வாழ்ந்து மோக்ஷ சாம்ராஜ்யம் பெற அருள் பாவிப்பவள்.

92. கராமலகா

குரு தத்துவ ஜ்ஞானத்தின் பிரகாசத்தால் பிரேம பூர்ண த்யானத்துடன் கலந்த ஜபம் எழுச்சியான  ஓட்டம் கொண்டு அஸங்க்யேயமான ஆவ்ருத்தியுடன் வீறு பெற்று புத்திக்கு மிக்க ஆழமான  விமர்ஸ ஸக்திஏற்பட்டு, அதனால் ஸாதகன் ஆத்மா ராமமான தேஜோவிலாசம் அடைந்து ஸாஸ்வதமான ஸாந்தாநந்தத்தில் மூழ்கி சீக்கிரமே ஜீவன் முக்தனாக அனுக்ரஹிப்பவள்.

93. காலீ

மஹாகாளரின் ப்ரேமையை அடைந்து அநுபவிக்கும் ஸந்தோஷத்தின் பூரிப்பினால் வீறு பெற்ற மனத்துடன் பஞ்ச க்ருத்ய கலனம் - அதாவது பிரபஞ்ச பராமரிப்பைத்  தானே தன் அபார கருணையால்  நிகழ்த்தி மகிழ்பவள்.

94. கராமலகரோஸிநீ

குரு தத்துவ விமர்சஸனம் செய்யும் உபாசகனுடைய புத்தியில் தன் வித்யுத் சக்தியை ப்ரசரிக்கச்செய்து சக்தி தத்துவத்தின் ஜ்ஞான தேஜஸ்ஸை ஜ்வலிக்கச்செய்து அநுக்ரஹிப்பவள்.

95. கராமலகமாதா

ஜாட்யத்தை அறவே ஒழிக்க வல்ல குரு தத்துவாநு ஸந்தானம் செய்து தெளியும் ஸாதகனுடைய குறை பாடுகளை மன்னித்து அவனுக்கு சீக்கிரமேஆத்மஜ்ஞானம் பூரணமாக ஸித்திக்க அருளும் பரம க்ஷமாஸீலம் நிரம்பிய பரம கருணாமூர்த்தியான ஜகன்மாதா.

96. கராமலகசேவிநீ

மோக்ஷ சாம்ராஜ்ய ப்ராப்திக்கு ஆதாரமான ஆத்ம ஜ்ஞானத்தை அளிக்க வல்ல குரு தத்துவத்தில் தானே ஊடுருவிப்பாய்ந்து ஸாதகனின் புத்தியில் குரு பாதுகா தியானம் கம்பீரமாக விரவி ஸக்திமத்தாக ப்ரவஹி க்க அநுக்க்ரஹிக்கும் கருணாமூர்த்தி.

97. கராமலகவத்யேயா

ஸாதகனுடைய சஹஸ்ரதள கமல மத்தியில் அமைந்துள்ள மாத்ருகா மணிபீடத்தில் குருமுர்த்தியாக பிரதிஷ்டையாகி பிரகாசிக்கும் குருதத்துவ ஜ்யோதிஸ்வரூபிணியாக ஜ்வலித்துக்கொண்டு பாவனையின் ஸாதனையின் ஊடே அவனுடைய புத்தியில் ஆத்ம ஞானத்தெளிவு ஏற்பட்டு சீக்கிரமே முக்தி ஸித்திக்க அருளும்  அனுக்கிரஹமூர்த்தி.

98. கராமலகதாயிநீ

ப்ரஹ்மரந்த்ர கமலத்தின் மத்தியில் பிந்து பீடத்தில் ஸாஸ்வதமாக ப்ரதிஷ்டை ஆகி உள்ள பரம ஹம்ஸ ஸ்வரூபியான குருநாதரின் வடிவில் ஜாஜ்வல்யமான குரு தத்துவ ஜ்ஞான தேஜஸ்ஸின்  ஜ்வாலைகள் பரந்து வீச ஸாதனையால் அங்கு வந்துள்ள ஸாதகனை ஆட்கொண்டு அவன் அக்கணமே தன்னில் ஒன்றி லயித்து நிரதிஸயானந்தம் அடைந்து ஸுகிக்க அருளும் கருணாமூர்த்தி.

99. கஞ்சநேத்ரா

ப்ரஹ்மாநன்தத்தை தவிர வேறு என்த உணர்ச்சியும் அணுகாத ஒரு மறைவிடம் ஆனதால் ஒரு குஹை போன்று அமைந்து இருத்தலால் விதிபிலம் என்ற சிறப்பு அடைமொழியால் குறிக்கப் படும்  ப்ரஹ்மரந்த்ர கமலத்தின் கர்ணிகா ஸ்தானத்தில் பரமஹம்ச ஸ்வரூபியான குருமூர்த்தியாக  வீற்றிருந்து குண்டலினி யோக சாதனையல் அங்கு வந்தடையும் அனன்ய சரணாகதனான ஸாதகனை தன் கருணா கடாக்ஷ வீக்ஷணத்தால் அபி வர்ஷித்து அவனுக்கு சத்யோமுக்தி அளித்தருளும் க்ருப்பைக்கடல்.

100.கஞ்சகதி:

குண்டலினி யோக ஸாதனா க்ரமங்களின் வாயிலாக மூலாதாராதி சஹஸ்ராராந்தம் அமைந்துள்ள  எல்லா தளங்களிநூடே ஒவ்வொரு கமலத்திலும் நின்று நின்று தாரணையால்  ஸோபான மார்க்க கதியாக மேலும் மேலும் சென்று ப்ரஹ்மரந்திரம் அடைந்து பரமஹம்ச மூர்த்தியாய் ஜ்வலித்துக் கொண்டு இருக்கும் பரதேவதையின் பாதகமலம் சேர்ந்து அனன்ய ஸரணாகதி புரஸ்ஸரமாக ஸக்தி ப்ரவாஹ வெள்ளத்தில் மூழ்கித் தெளித்த நிலையில் ஆனந்த பரவசமாகப் பூரித்துக் கொண்டிருக்கும் ஸாதகனை ஆட்கொண்டு முக்தி அளித்து அருளும் பெரு வள்ளல்.

101. கஞ்சஸ்தா

உபாசகனுடைய முக கமலம் கரகமலம் பாதகமலம் மூலாதாராதி தளங்களிளுள்ள கமலங்கள் ஆகிய கேந்திர ஸ்தானங்களின் எப்பொழுதுமே ஸாந்நித்யமாக இருந்துகொண்டு அவனுடைய  எண்ணங்களையும் செயல்பாடுகளையும் நல் வழி படுத்திக்கொண்டே இருப்பதுடன்  ப்ரஹமரந்த்ர கமலத்தில் குருமூர்த்தி ஸ்வரூபத்தில் தானே வீறுடன் அமர்ந்து அவனுடைய புத்திக்கு வீர்யமான விமர்ஸ ஸக்தி அளித்து, ஆத்ம ஜ்ஞானம் ஸித்திக்க அநுக்க்ரஹிப்பவள்.

102. கஞ்சதாரிணீ

ஸர்வசக்திமயி ஆனதால் சர்வ ஸக்திகளுக்கும் பிரதானமான புக்தி ஸக்தி ஸிரஸ்ஸில் பிரதிழ்டை ஆகி இருப்பதால், ஸ்வரமண்டல ஸ்தானமாகிய விசக்தி ஸ்தானத்தில், அதாவது கண்டத்தில் ஸிரோ மாலையைத் தரித்து அது லம்பமாக அநாஹத ஸ்தானத்தை அதாவது ஹ்ருதயத்தை வலையமாக சுழன்று சுற்றிக்கொண்டு பிரகாசிப்பதால் உபாசகனுடைய த்யானத்தில் தன்னுடைய ஸர்வஜ்ஞத்வம், ஸர்வவ்யாபகத்வம், ஸர்வ ஸக்தத்வம் ஆகியவற்றை வ்யாபரிக்கச்செய்து அவனுடைய புக்தியை ஆத்ம விசாரத்தில் இயக்கி பிரம்மஜ்ஞானம் ஸித்திக்க அருள்பவள்.  

103. கஞ்சமாலாப்ரியகரீ

உபாசகனுடைய ஸரீர வ்யக்தியில் சைத்தன்ய ஸ்தானமாகிய ஸிரஸில் மஹோந்நத தளமான சஹ்ஸ்ராரமே ஹம்ஸ யோக பீடமாவதாலும் அதுவே மாத்ருகா பிரதிஷ்டான ஸ்தலமாகவும் அமர்ந்து இருப்பதாலும் மந்திர பீஜங்களின் ஒலிக்கூட்டமே தன் பிரதி பிம்பமாவதாலும் இக் காரணங்கள் பற்றி அவனுடைய பிரஹ்மரந்த்ர கமலத்தில் ஊடுருவிப் பாய்ந்து விளையாடு வதிலேயே பெரிதும் ஆனந்தம் ஏற்படுவதால் அங்ஙனமான யோகிகளின் ஸிரோமாலையே    தனக்கு பெரிதும் உகந்த பூஷணமாக கண்டத்தில் அணிந்து மகிழ்பவள்.

104. கஞ்சரூபா

உபாஸகனுடைய  மூலாதாராதி ஸஹஸ்ராராந்தம் உள்ள எல்லா கமலங்களிலும் தானே பூர்ண ஸாந்நித்தியம்  கொண்டு அமர்ந்து அவற்றினூடே குண்டலினி யோக ஸாதனை  வாயிலாக ஒன்றன்பின் ஒன்றாக அவன் மேலும் மேலும் ஏறிக்கொண்டே சென்று ப்ரஹ்மரந்த்ரத்தை அடையும் க்ரமத்தில் அந்தக்கமலத்தின் உருவாகவே அவனுக்குத் தன்னை உணர்த்தி அதாவது அவன் புத்தியில் தான் ஒரு "கமலினீ" யாக  ரூபதர்ஸனம் அளித்து அவனையும் ஒரு கமலாக்ஷ யோக சித்தனாக ஆக்கி அதன் மூலம் அவனுக்கு நித்யாநந்த லயயோகம் அதாவது ஸாக்தானந்தம் ஸித்தித்து, மந்த்ரமே விக்ரஹமானவனாகி வித்யா ஸ்வாரூபியாகவே  வீர்யமாகவாழ அருள்பவள்.

105. கஞ்சனா

உபாஸகனுக்கு நித்ய சுகம் அளிப்பவள்.

106. கஞ்ஜஜாதி:

குண்டலினி யோக ஸாதன க்ரமங்களில்மூலாதாராதி ஸஹஸ்ராரந்தம் உள்ள கமலங்களில் மட்டுமே ஸாதகனால் பாவனையின் மூலமாக அடைய ஸாத்தியமானவள்.

107.  கஞ்ச கதி:

யோக ஸாதனையில் உபாசகனால் அடையப்படக்கூடிய புரமோத் க்ருஷ்டமான ஸ்தானமாக இருப்பவள்.

108.  கஞ்ச ஹோம பராயணா

ஹோமங்களில் மூலமந்திர உச்சாரணத்துடன் செய்யப்படும் தாமரைப் புஷ்ப ஆஹுதிகளில்மிக்க த்ருப்தி அடைந்து இஹபர சுகங்கள் அருள்பவள்.

109. கஞ்சமண்டல மத்யஸ்தா

குண்டலினி யோகக் க்ரமங்களில் த்யானயோக சாதனையில் ஹ்ருதய கமல ஸ்தானத்தில் அமர்ந்து சகுண ஸ்வரூப பாவனையின் மூலம் ஸாக்ஷாத்கரிக்க ஸாத்யமான கருணாமூர்த்தி.

110.  கஞ்ஜாபரணபூஷிதா

மனிதர்களின் ஸிரஸ்ஸுகளாலான அழகிய ஒரு கோவையை அதாவது யோகிகளின் சஹஸ்ரார கமலங்கள் கோக்கப்பட்டு அங்கனமாக யோக பூஷனமாகிய மாலையைக் கண்டத்தில் தரித்துக் கொண்டு பிரகாசிப்பவள்.


(அடுத்த பதவில் தொடரும்)

No comments:

Post a Comment