தன் வலப்பாகத்தில் ப்ரதிஷ்டை ஆகிஇருக்கும் ஸர்வலோக மஹோபதேசகரான மஹாகாலரை பரிபூரணமாகத் தன் வசப்படுத்தி மோஹ நிர்த்தூதரான அந்த யோகீஸ்வரரைத் தன் மாயையால் தன் விஷயத்தில் மட்டும் மோஹம் அடையச் செய்யும் த்ரைலோக்யமோஹனகரீ.
ஆதி காலத்தில் பல்லாயிரக் கணக்கான கல்பங்களுக்கு முன் திருக் கைலாயத்தில் முப்பத்து முக்கோடி தேவர்கள் புடை சூழ ஸ்ரீ மஹாகாளரால் ஆராதித்து, துதித்து அழைக்கப் பட்டபோது யாவரும் பிரமிக்கத் தக்க வகையில் ஆச்சர்யமாக, அசாதாரணமான அழகு லாவண்யத்துடன் எல்லோரையும் மோஹிக்கவைக்கும் ஜ்யோதிஸ் பரக்க வீச திடீர் என்று ஓர் அதிசய பேரழகியாக ஆவிர்பவித்து அருளியவள்.
பத்ததியில் விதிக்கப்பட்ட முறைப்படி தன்னால் இயன்ற அளவு க்ரமமாக ஆராதனை க்ரமங்கள் நிகழ்த்தி தனக்கு அர்ப்பணித்து தன்னிடம் சரண மடையும் தன் பக்தர்களிடத்தில்அளவுகடந்த ப்ரியம் கொண்ட ஜகன்மாதா.
தன்னுடைய கேச பாரத்தின் சோபையும் கரிய சாயலும் கொண்டு ஆகாஸ வீதியில் ப்ரகாசித்துக்கொண்டு ஸதா சஞ்சரித்துக் கொண்டே இருக்கும் மேக ஜாலங்களில் தன்னை ஆவாஹனம் செய்து ஆராதிக்கும் தன் பக்தர்களை ஆட்கொண்டு அருளுபவள்.
கூர்ம பீடத்தின் சக்தி தானே ஆவதால் அந்த கூர்மாஸன சக்தி தேவதைகளை ஆராதிக்கும் போது தன்னுடைய வ்யக்த மூர்த்தியை ஆராதிக்கும் தன்மயத்வ பாவத்துடனேயே பூஜைகள் செய்யும் தன் பக்தர்களை ஆதரித்து, அவர்கள் பால் சுரக்கும் அன்புப் பெருக்கால் அவர்களைத் தன் ப்ரதிபிம்பமாகவே கண்டு அவர்களையே ஸாக்ஷாத் கூர்மாஸன பீட சக்தி தேவதைகளாகவே பரிணமிக்கச் செய்து அவர்களை ஆட்கொண்டு அருளும் ஆனந்த மூர்த்தி.