Wednesday 4 December 2013

ஸ்ரீ தக்ஷினகாளிகா ஸஹஸ்ரநாம விரிவுரை (21)



426.   கலகேயா

மிக மதுரமான  த்வனியுடன் தன்னைக் குறித்து கானம் செய்யும் தன் பக்தர்களை ஆட்கொண்டு அருளி  மகிழ்பவள்.

427.   கர்க்கராஸி:

ஹாஸ்ய ரஸத்திலும், கேளிக்கைகளிலும், கேலிப்பேச்சுகளிலும் வேடிக்கையான நகைச்சுவை பரிஹாஸப்பேச்சுகளிலும் மிகவும் பெரிதும் களிப்பு கொண்டவள்.

428.   கலகேயப்ப்ர பூஜிதா

ஸாஸ்த்ர பத்ததிப்படி சங்கீத வித்யையைஅப்பியஸிப்பவர்களின் நாதோபாஸன க்ரமமே தனக்கு உகந்த பூஜாக்ரமமாகஏற்று அவர்களை ஆட்கொண்டு அருள்பவள்.

429.   கன்யாராஸி:

விளையாட்டுப் போட்டி பந்தயங்கள், கைகோத்து ஆட்டங்கள், கும்மி கோலாட்ட நிகழ்சிகள், வேடிக்கையான உல்லாஸக் கேலிப் பரிஹாசப் பேச்சு பரிமாற்றங்கள் இவ்வகையான கேளிக்கை களியாட்டங்களில் ஈடுபட்டுள்ள சிறு பெண்கள் கூட்டங்களில் ஆர்வத்துடன் கலந்து கொண்டு அந்தக் குழாங்களின் தலைவியாகவே பங்கேற்று இயக்கி மகிழ்பவள்.

430.   கன்யகா

ஸதா விளையாடுக்களிலேயே  ஈடுபட்டு மகிழும் பத்து வயது பெண்ணின் உருவத்தில் ஆவிர்பவித்து தன்னை சூழ்ந்துள்ள யாவரையும் தன்னுடன் லீலாவிநோதமாக விளையாடச் செய்து மகிழ்விப்பவள்.

431.   கன்யாகப்ரியபாஷிணீ

இடையறாது பல்வகை கேளிக்கைகளிலேயே ரமித்துக்கொண்டிருக்கும் இளம் பிராயக் கன்னிகளுடன் பரஸ்பரம் இன்பம் பொங்கி வழிந்தோட ஸல்லபித்துக் கொண்டே இருப்பதில் பெரிதும் மகிழ்ச்சி கொள்பவள்.

 432.   கன்யகாதானசந்துஷ்டா

உலகறியாமல் விளையாட்டுப் போக்காகவே வளர்ந்து வரும் தன் பெண்ணை இளம் பருவத்திலேயே எல்லா அம்சங்களிலும் பொருத்தமாகவும் தகுதியாகவும் உள்ள ஒரு ஸத்பாத்ரமான மணாளனுக்கு தானம் செய்து கொடுக்கும் தன் பக்தனிடத்தில் மிக்க மக்ழிச்சி அடைந்து அவனை ஆட்கொண்டு அருள்பவள்.

433.   கன்யகாதான தோஷிணீ

ருதுவாகாத இளம் பருவப்பென்னை ஸாஸ்திர விதி முறைப்படி ஸ்வீகரித்து விவாஹம் செய்துகொள்ளும் தன் பக்தநிடத்தில் பெரிதும் மகிழ்ச்சி அடைந்து அவனை ஆட்கொண்டு அருள்பவள்.

434.   கன்யாதானா

பேதை பெதும்பை ஆகிய இரு பருவங்களுக்குள்ளேயே இளம் பெண்களை தக்க மணமகனைத் தேடித் தெரிந்தெடுத்து விதிமுறைப்படி திருமணம் செய்து தானம் செய்யும் பக்தர்களை ஆட்கொண்டு அருள்பவள்.

435.   கரானந்தா 

தன் க்ரியா  ஸக்தியைத் தன் பக்தனிடத்தில் ப்ரஸரிக்கச் செய்து அவனை கர்மாக்களில் ஈடுபடுத்தி அதன் மூலம் அவன் தூய்மை பெறுவதைக்கண்டு அவனுக்கு ஜ்ஞானமும் ஆனந்தமும் முக்தியும் அருளும் பெருவள்ளல்.

436.   கன்யாதானக்ருஹேஷ்டதா

இளம் பருவப் பெண்ணை, ருது ஆவதற்கு முன்னரே ஸத்பாத்திரமான, எல்லா வகைகளிலும் ஒத்த மணமகனைத் தேடி வேத ஸ்மருதிகளின் விதி முறைப்படி விவாஹம் நடத்தி கன்யாதானம்  செய்து கொடுக்கும் நற்குடிமகனை ஆட்கொண்டு, அவன் கோரிய வரங்களை வரையாது வழங்கி அருளும் ஓள தார்ய மூர்த்தி.

437.   கர்ஷனா

ஆயிரத்தி எட்டு அண்டங்களிலும் பரந்து ஆங்காங்கு ஜீவிக்கும் எல்லா உயிரினங்களையும் தன் பால் ஈர்க்கும் பரம்பொருளின் சகுண ப்ரஹ்மஸக்தியின் வ்யக்த மூர்த்தி.

438.   கக்ஷதஹனா

காட்டுத் தீயானது மாபெரும் அரண்யங்களை எரித்துச் சாம்பலாக்குவதுபோல் தன் பக்தர்கள் பூர்வ ஜன்மங்களில் அஜ்ஞானம் காரணமாக இந்த்ரியங்களின் துர்வ்ருத்தியால் செய்துள்ள மஹா பாபங்களாகிய பெரும் வனங்களைத் தஹித்துப் பொசுக்கும் கோரமான அக்னி சக்தியின் வ்யக்த மூர்த்தி.

439.   காமிதா

எல்லா ஜீவராசிக்களுக்கும் எப்பொழுதுமே பொங்கிவழியும் பிரேமையுடன் ஸதா விரும்பப் படும்  ஜகன்மாதா.

440.   கமலாஸனா

உபாசகனுடைய மூலாதாராதி ஆதார சக்ர கமலங்களில் தானே விலாஸமாக  வீற்றிருந்து, அவன் பிரேம தியான பூர்வமாக  யோகம் அப்யஸிக்குங்கால் குண்டலினியை வேருடன் எழச்செய்து, அவனைப் பூரண லயத்தில் அமர்த்தி அவனுக்கு நிஷ்டையும் ஆனந்தமும் முக்தியும் அருளி, மகிழும் பரம கருணாமூர்த்தி.

441.   கரமாலானந்தகர்த்ரீ

அக்ஷமாலை தற்சமயம் கையில் இல்லாத போது, வலது கை விரற் கணுக்களைக்  கட்டை விரலால் விதிப்படி வரிசை க்ரமமாக ஸ்பர்சித்து ஸங்க்யையை காப்பாற்றி இந்த முறையையே ஜபமாலை யாகக்கொண்டு செய்யப்படும் பத்ததியைக்  கையாண்டு ஜபம் செய்யும் உபாசகனை ஆட்கொண்டு அவனுக்கு மந்த்ர் ஸித்தியும் ஆனந்தமும் மனச்சாந்தியும் முக்தியும் அளித்தருளும் ஆனந்த மூர்த்தி.  

442.   கரமாலாப்ரதோஷிதா

தான் மந்த்ரமூர்த்தி ஆதலால் ஜப காலத்தில் அக்ஷமாலை தற்சமயம் கைவசம் இல்லாத போது மந்திர ஆவ்ருத்தி ஸங்க்யையைக் காப்பாற்ற சிறந்த முறையான கரமாலையைக் கையாளும் உபாசகனை அநுக்ரஹித்து வளர்த்துக் கைதூக்கி மோக்ஷம் அளிக்கும் பரம கருணாநிதி.

443.   கரமாலாஸயானந்தா

உபாஸகன் தேவதையின் அருளை அடைந்து உய்யும் மார்க்கங்களில் தலையாயது யஜ்ஞங்கள்.    யஜ்ஞங்களில் ஸர்வ  ஸ்ரேஷ்டமானது  ஜபயஜ்ஞம். மந்த்ராவ்ருத்தி ஸங்க்யையைக்  காப்பாற்றிக் கொடுப்பது அக்ஷமாலை. அக்ஷமாலை தற்சமயம் கைவசம் இல்லாத போது உபாஸகனின் வலது ப்ரகோஷ்டத்தில் அமைந்த கரமாலையே இதற்க்கு துணை நிற்பதாம். இங்கனமாக ஜப யஜ்ஞத்திலேயே அல்லும் பகலும் பிரேமையாக ஈடுபட்டு இயக்கித் தன்மயமாகி தேவதா ஸ்வரூப லயம் அடைந்து சரணமடையும் பக்தனுக்கு ஆனந்தமும் முக்தியும் அளித்தருளும் ஆனந்த மூர்த்தி.

444.   கராமாலாஸமாகமா

உபாஸகன் தேவியின் ஸ்வரூபத்தை முதலில் பாதாதி கேசாந்தமாக  த்யானம் செய்து மறுபடியும் கேசாதி பாதாந்தகமாக த்யானம் செய்வது போல் ஜபகாலத்தில் கரமாலா பத்ததியில் முதலில் அநாமிகா மத்ய பர்வத்தில் தொடங்கி ப்ராதக்ஷிண்ய க்ரமமாக தர்ஜநீ மூல பர்வ பர்யந்தம் ஒரு தஸக ஸங்க்யாகணனம் செய்து திரும்பி விலோம க்ரம ஸமாவர்த்தனமாக வாமகதியாக  வந்து ஆரம்பித்த இடத்திலேயே அடுத்த தசகத்தை பூர்த்தி செய்து, இந்த ரீதியிலேயே தொடர்ந்து, அஷ்டோத்தர சதம், ஸஹஸ்ரம், லக்ஷம் கோடி என்றவாறாக, சாத்தியமானவரை இந்த ப்ரயாசையை  ப்ரேம த்யானத்துடன்  ஸாதித்து இங்ஙனமாக இந்த யஜ்ஞ கர்மத்தின் அனுஷ்டானத்தை செவ்வனே செய்து த்ரிகரண சுத்தியுடன் தனக்கு அர்ப்பணிக்கும் தன் பக்தனை ஆட்கொண்டு முக்தி அளித்தருளும் விராட் ஸ்வாரூபிணீ.

445.   கரமாலாஸித்திதாத்ரீ

அக்ஷமாலை இல்லாத நிலையில் அதற்கு மாறாக கரமாலை பத்ததியில் ஸங்க்யையைக் காப்பாற்றி ப்ரேம த்யானைத்துடன் ஜபம் செய்து தனக்கு அர்பணிக்கும் தன் பக்தனுக்கு  சீக்கிரமே மந்திர ஸித்தி அளித்து அதனை ஆத்மார்த்தமான கார்யங்களிலும் லோகோபகாரமான கார்யங்களிலும் பிரயோகிக்கும் சக்தியும் அளித்தருளி மகிழும் பராசக்திமூர்த்தி.

446.   கரமாலாகரப்ரியா

கரமாலா பத்ததியில் உரு ஏற்றின ஜபத்தை ஆதாரமாகக் கொண்டு தனக்கு செய்யப்படும் ஆராதன க்ரமத்தில் அளவு கடந்த மகிழ்ச்சி கொள்பவள்.


(அடுத்த பதிவில் தொடரும்)

No comments:

Post a Comment