Monday, 16 December 2013

ஸ்ரீ தக்ஷினகாளிகா ஸஹஸ்ரநாம விரிவுரை (28)


573.   க்ரகசா 

அரம்  மரத் துண்டை அறுப்பது போல் துஷ்டர்களை கடுமையாக தண்டிப்பவளாயினும் நாற்புறமும் சிறந்த நறுமணம் வீசும் தாழம்பூவை ஆபரணமாக அணிவதில் பெரு மகிழ்ச்சி கொள்பவள்.  அதாவது ஸுவாசனைகள் (பூர்வ்கர்மத்தில் நற்கருமங்கள் பல புரிந்துள்ளதால் உண்டான நற்பண்புகள்  மலிந்துள்ள சாதுக்கள் எல்லோரையும் தன் அநுக்ரஹத்தால் மகிழ்வித்து ஆட்கொண்டு அருள்பவள். அதாவது துஷ்ட நிக்ரஹ சிஷ்ட பரிபாலனம் செய்து உலகை ஆண்டருள்பவள்.

Friday, 13 December 2013

ஸ்ரீ தக்ஷினகாளிகா ஸஹஸ்ரநாம விரிவுரை (27)



554.   கல்பலதா

ஸிவ  தத்துவ  ப்ரதிபாதமாகிய  வ்ருக்ஷத்தின்  மீது  ஆரோஹணிக்கும்  ஸக்தி  தத்துவ ப்ரதிபாதமாகிய "லதா " எனப்படும் சக்தி  சிவ தத்துவ  ஸ்வரூபிணியாகத்  தன் பக்தனின் புத்தியில் ஆவிர்பவித்து,  அங்கு தானாகவே ப்ரஹ்மஞான  ஜ்யோதிஷ்மதியாகவும் மனோல்லாஸ லாஸ்ய லோலினியாகவும் அமர்ந்து  அவனுடைய ஸாதனா க்ரமங்களில் தன் வித்யுத்  ஸக்தியை ப்ரசரிக்கச் செய்து அவனை ஒரு ஆதர்ச  உபாஸக தல்லஜனாக பிரகாஸிக்கச் செய்து மகிழும் பரமாநுக்ரஹமூர்த்தி.

Wednesday, 11 December 2013

ஸ்ரீ தக்ஷினகாளிகா ஸஹஸ்ரநாம விரிவுரை (26)



537.   கபர்திஜபமாலாட்யா

யோகியர்கள் தம் ஸகுணப்ரஹ்ம உபாஸனத்தின் அங்கமான மந்த்ர ஜபத்தினூடே ஜப ஸங்க்யையைக் காப்பாற்றுவான்.  கையில் கணனத்திற்காகத் தரிக்கும் அக்ஷமாலையின் வ்யக்தியில் தானாகவே அமர்ந்து உறைந்து ஸாதகனின்  ஜபயஜ்ஞத்தைக் காத்துக் கொடுத்து தன் பக்தனுக்கு முக்தி அளிதருளும் யஜ்ஞஸ்வாமினீ.

Monday, 9 December 2013

ஸ்ரீ தக்ஷினகாளிகா ஸஹஸ்ரநாம விரிவுரை (25)



513.   கங்காலமோஹநிரதா

தன் வலப்பாகத்தில் ப்ரதிஷ்டை  ஆகிஇருக்கும் ஸர்வலோக மஹோபதேசகரான  மஹாகாலரை பரிபூரணமாகத்  தன் வசப்படுத்தி மோஹ நிர்த்தூதரான  அந்த யோகீஸ்வரரைத் தன்  மாயையால் தன்  விஷயத்தில்  மட்டும் மோஹம் அடையச் செய்யும்  த்ரைலோக்யமோஹனகரீ.

Sunday, 8 December 2013

ஸ்ரீ தக்ஷினகாளிகா ஸஹஸ்ரநாம விரிவுரை (24)


494.   கபிலாராத்யஹ்ருதையா

கபில முநிவராக அவதரித்து மகாவிஷ்ணு முதலான எல்லா தேவர்களாலும் விதிமுறைப்படி ஆராதிக்கப்படுபவள்.

Friday, 6 December 2013

ஸ்ரீ தக்ஷினகாளிகா ஸஹஸ்ரநாம விரிவுரை (23)


470.   கனீனா

ஆதி காலத்தில் பல்லாயிரக்  கணக்கான கல்பங்களுக்கு முன் திருக் கைலாயத்தில்  முப்பத்து  முக்கோடி  தேவர்கள்   புடை சூழ   ஸ்ரீ மஹாகாளரால்  ஆராதித்து, துதித்து அழைக்கப் பட்டபோது  யாவரும் பிரமிக்கத் தக்க வகையில்  ஆச்சர்யமாக, அசாதாரணமான அழகு லாவண்யத்துடன்  எல்லோரையும்  மோஹிக்கவைக்கும் ஜ்யோதிஸ் பரக்க வீச  திடீர்  என்று  ஓர்  அதிசய  பேரழகியாக ஆவிர்பவித்து அருளியவள்.

Thursday, 5 December 2013

ஸ்ரீ தக்ஷினகாளிகா ஸஹஸ்ரநாம விரிவுரை (22)



447.   கரப்ரியா

பத்ததியில் விதிக்கப்பட்ட முறைப்படி தன்னால் இயன்ற அளவு க்ரமமாக ஆராதனை க்ரமங்கள் நிகழ்த்தி தனக்கு அர்ப்பணித்து தன்னிடம் சரண மடையும் தன் பக்தர்களிடத்தில்அளவுகடந்த ப்ரியம் கொண்ட ஜகன்மாதா.

Wednesday, 4 December 2013

ஸ்ரீ தக்ஷினகாளிகா ஸஹஸ்ரநாம விரிவுரை (21)



426.   கலகேயா

மிக மதுரமான  த்வனியுடன் தன்னைக் குறித்து கானம் செய்யும் தன் பக்தர்களை ஆட்கொண்டு அருளி  மகிழ்பவள்.