Tuesday 7 January 2014

ஸ்ரீதக்ஷினகாளிகா ஸஹஸ்ரநாம விரிவுரை (41)



879.   குமதீ

ப்ருதிவீ தத்துவத்தின் வ்யக்த மூர்த்தியான மூலாதார சக்ர தள கமலத்தையே தன் ஸ்வரூபமாகக் கொண்டு தன் பக்தன் தன்னை அதனிலிலேயே முழுமையாக உணர்ந்து த்யானித்து இஷ்ட தேவதா தன்மயத்வம் எய்தி நித்ய சுகம் பெற அருளும் தானிதி.

880.   குலஸ்ரேஷ்டா

குலஸாதகர்களின் பரம்பரையில் வேரூன்றிய ஸாக்த உபாஸன க்ரமங்களில் ஸர்வோத்தமமான   குலதெய்வமாகவும்  இயங்கிக்கொண்டு தன் பூரண ஸாந்நித்யமும் பூரண அருளும் பொழிந்து அந்தக் குலத்தையே  உத்தாரணம் செய்தருளும் கருணாகடாக்ஷ மூர்த்தி.

881.   குலசக்ரபராயணா

தன்னை  ஆராதிக்கும் குல ஸாதகர்களின் குழாங்கள் தன் வித்யோபாஸன கார்யக் க்ரமங்கள் யாவற்றிலும், பர தேவதையாகத் தன்னை ஆராதிக்கப்புகு  முன்   தன் பரிவார தேவதைகளை ஆராதிப்பது அத்யாவஸ்யம் என்பதை உணர்ந்து அந்த தேவதைகள் நன்கு ஆராதிக்கப்பட்டு நன்றாக திருப்தி அடைந்ததைக் கண்ட பிறகே தனக்கு செய்யும் ஆராதன க்ரமங்களை ஏற்று மகிழும் பக்த பராதீன மூர்த்தி.

 882.   கூடஸ்தா

தன் வித்யா மூல மந்தரத்தின் யந்த்ரமாகிய சக்ர மேருவின் உச்ச சிகர ஸ்தானமாகிய பிந்துவே தன் யதாஸ்தானமாகக் கொண்டு அஸஞ்சலமாக அங்கேயே நிரந்தரமாக வாஸம்  செய்துக்கொண்டு அங்கே தன்னை நாடி வந்து அனன்யமாகச் சரணமடையும் உண்மையான த்ருட பக்தர்களை ஆட்கொண்டருளும்  பரதேவதை,

883.   கூடத்ருஷ்டி

தன் பக்தர்களை பரிபாலிப்பதில் அஸஞ்சலமான போக்கு உள்ள தீன ஸரண்ய பரதேவதை.

884.   குந்தலா

சக்ஷகம் எனப்படும் பான பாத்திரத்தில் தனக்கென்று  திராக்ஷை பழம் பேரீச்சம் பழம் இஞ்சி தேன், பசும்பால் கற்கண்டு, முதலிய பொருள்களின் சேர்க்கையால் தயாரிக்கப்பட்ட பான விசேஷத்தை அடிக்கடி ருசித்துப் பருகுவதில் பெரிதும் மகிழ்ச்சி கொள்பவள்.

885.   குந்தலாக்ரீதி:

தன் கேஸபாஸம்ஒரு கட்டுப்பாடும் இன்றி நாற்புறமும் சுழன்று வீசிப் பரவுவது போல் தானும் எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல் யதேச்சையாக ஸஞ்சரிக்கும் இயல்பு உள்ளவள்.

886.   குஸலா

மஹா மங்கல மூர்த்தி.

887.   க்ருதிரூபா

க்ரியா  ஸக்தி  ஸ்வரூபிணீ.

888.   கூர்ச்சபீஜதரா

வித்யாராஜ்ஞீ  என்ற மந்த்ரதிலுள்ள இருபத்திரண்டு பீஜங்களில் ஒன்றாக கூர்ச்ச பீஜம் எனப்படும் "ஹூம்"   காரம் ஒரு பீஜமாக அமைந்த மூல மந்த்ர ஸ்வரூபிணீ.

889.  கூ:

எப்பொழுதும் எங்கும் எதிலும் "க்ரீம்" காரமாகிய தன் பீஜத்தின் ஒலி ஓட்டத்தில் தன் வித்யுத் ஸக்தியை ப்ரஸரிக்கச் செய்து அதனை வீர்யவத்தாக பிரயோகித்தே  பஞ்ச க்ருத்யம் செய்து இந்தப் பரந்த ப்ரபஞ்சத்தை நிர்வஹித்து அருள்பவள்.

890.   கும்கும் கும் கும் சப்த ரதா

ஸக்தி ஸிவ தத்துவத்தின் ப்ரதிபாதகமான "க"  கார  " உ"  கார இணைப்பின் மீது பிந்து அதாவது அநுஸ்வாரம்   ஏறி அங்ஙனமாக அமைந்த அந்த பீஜம் "கும்" நான்கு முறை மடங்குவதால் உண்டாகும்  "கும் கும் கும் கும்" என்று உருவாகும் மொத்த கூட்டமைப்பானது,  காளிகையானவள், ஸவம் போல் செயலற்று கீழே கிடக்கும் மஹாகாலரின் ஹ்ருதய கமலத்தில் நின்று ஆனந்த நடனம் புரிந்து, அதாவது தன் வித்யுத் ஸக்தியை அவருடைய ஹ்ருதயத்தில் ப்ரஸரிக்கச் செய்து அவருக்கு மனதில் கரை புரண்டோடும் ஆனந்தமும் உத்ஸாஹமும் பெருக அருள் புரிந்து மகிழ்வதைக் குறிக்கிறது.

891.   க்ரூம் க்ரூம் க்ரூம் க்ரூம் பராயணா

கும் கும் கும் கும் என்ற கூட்டமைப்பின் அடங்கிய ஒவ்வொரு  "கும்" காரத்தினுடைய  ரேபம், அதாவது "ர" கார வ்யஞ்ஜன மாத்ருகை இணைவதால் உண்டாகும் "க்ரூம் க்ரூம் க்ரூம் க்ரூம்" என்ற கூட்டமைப்பானது ஸக்தி ஸிவ தத்துவத்தின் ப்ரதிபாதகமான "கும்" காரத்தின் ஒலி ஓட்டமானது அக்னி ஸக்தியின் ஆரோபணத்தால்  தடை இல்லா வீறு கொண்டு காளிகையின் வித்யுத் ஸக்தியானது உபாஸகனின்  புத்தியில் அமோகமான அதிர்வுடன் மின்னல் வேகமாகப் பாய்ந்து அவனது வித்யோபாஸன ப்ரயாசைகள் இலக்குத்தப்பாமல்  இஷ்ட தேவதையின் கருணா கடாக்ஷத்தின் வாயிலாக அதி சீக்கிரமே மந்த்ர ஸித்தி பெற்று அவன் நித்ய சுகம் அடைந்து ஸாந்த மூர்த்தியாகவும் ஜீவன் முக்தனாகவும் சிரஞ்ஜீவியாகவும் வாழப்பெறுவதைக் குறிக்கிறது.

892.    கும் கும் கும் ஸப்தநிலயா

ஸக்தி - ஸிவ தத்துவத்தின் ப்ரதிபாதகமான "கும்"  கார பீஜம்  மும்முறை மடங்குவதால் உண்டாகும் மொத்த கூட்டமைப்பானது,  காளிகையானவள் தானே அதனில் உறைந்து கொண்டு ஜீவாத்மா (பக்தன்)  பரமாத்மா (தான்) ப்ரபஞ்சம் ஆகிய முக்கூட்டின்  இணைந்த இயக்கத்தின் மூலமாக நிர்க்குணமும், நிர்லிப்தமுமான பரப்ரஹ்ம குணம் ஏற்று, ஸகுணமாக மாறி, தன் பக்தனாகிய ஜீவனைக்  கர்மம் ஜ்ஞானாநந்தம்  ஸாந்தி  ஆகிய முக்கூட்டின் ப்ரணாலியில் ஈடுபடுத்தி அவனை சீக்கிரமே ஜீவன் முக்தனாக ஆக அருள்வதைக் குறிக்கிறது.  

893.   குக்குராலயவாஸினி

தன் வித்யையாகிய வித்யாராஜ்ஞியின் ருஷியாகிய கால பைரவரே தன் அபரஸ்வரூபமாவதால் அவருடைய வ்யக்தியிலேயே தானே உறைந்து கொண்டு அவரை ஆராதிப்பவர்களைத் தன்னை நேரிட ஆராதித்தவர்களாகக் கொண்டு அவர்களை ஆட்கொண்டருளும் தன்மயத்வ ஸ்வரூபிணீ.

894.   குக்குராஸங்க ஸம்யுக்தா

கால பைரவருடைய ஸக்தியாகிய  காலபைரவியே தன் அபர ஸ்வரூப மாவதால் தன் உபாஸக மண்டலத்திற்கு கால பைரவியாகவே அதாவது குரு பத்னி யாகவே இயங்கி அநுக்ரஹிக்கும் தாதாத்ம்ய  ஸ்வரூபிணீ.

895.  குக்குரானந்தவிக்ரஹா

தானே நாத ப்ரஹ்ம ஸ்வரூபிணீ ஆவதால் உலகத்தில் எழும்பும் எல்லா த்வநிகளும் தன் ஸ்வரூபமாகக்  கொண்டவள்,  ஸர்வத்னிமயி

896.   கூர்ச் சாரம்பா

ஸ்ரீ மஹாகாலரின்  ஸாந்நித்யமும் ஸக்தியும் பூரணமாக அமர்ந்ததாகவும், ஸிவ தத்துவ ப்ரதிபாதகமானதாகவும் வித்யாராஜ்ஞீயில்  4ஆவது ,   5 ஆவது,   17ஆவது,    18 ஆவது பீஜங்களாக அமர்ந்துள்ள "ஹூம்" காரத்தின் ஒலி ஓட்டத்தின் மூலமாக தன் வித்யோ பாஸகர்களின் புத்தியில் தன் வித்யுத் ஸக்தியை முழுமையான வீர்யத்துடன் ப்ரஸரிக்கச் செய்து அவர்களின் முயற்சிகளும் செயல்பாடுகளும் ஸார்த்தமாகவும் சீக்கிரமாகவும் பூரண பலிதமடையச்  செய்து அவர்களை ஆட்கொண்டருளும் பராஸக்திமூர்த்தி.  

897.   கூர்ச்சபீஜா

பஞ்ச க்ருத்ய கலன செயல்பாடுகளில்  ஒரு பாங்காகிய ஸம்ஹாரம் செய்வதில்  ஸ்ரீ தேவி காளிகை ப்ரயோகிக்கும் ஒரு பீஜமாகிய "ஹூம்"  காரம் ஸிவ -  ஸக்தி  ப்ரதிபாதக பீஜமேயாம்.   அதனில் தன் ஸம்ஹார ஸக்தி அமர்ந்துள்ளதால் அதன் ஒலி ஓட்டத்தின் மூலமாகவே தன் வித்யோபாஸகர்களின் புத்திக்கு ஊரு விளைவிக்கும் அரிஷ்டவர்க்கங்களை அழித்தருளும்  விஸ்வாண்ட  ஸம்ஹாரமூர்த்தி.  

898.   கூர்சஜாபபராயணா

தாரா  என்றும்   கூர்ச்சம்  என்றும்  "தீர்க்கவர்ம" என்றும் சிறப்பித்துக் கூறப்படும் "ஹூம்"  கார பீஜத்தைத்  தனித்து  பிண்ட  மந்த்ரமாகவோ, இரட்டித்தோ, முக்கூட்டாகவோ வேறு பீஜங்களுடன் இணைந்த இதர மந்த்ரங்களாகவோ, இஷ்ட தேவதையை ப்ரேம பக்தியுடனும் அனன்ய ஸரணாகதி பாவத்துடனும் ஆழ்ந்து த்யானித்துக்கொண்டே லக்ஷக் கணக்கான ஆவ்ருத்தியாக ஜபித்து  அர்பணிக்கும் பக்தர்களை  ஆட்கொண்டு அவர்களுக்கு ஜீவன் முக்தி அளித்தருளும்  மந்த்ரமூர்த்தி.

899.   குசஸ்பர்ஸனஸந்துஷ்டா

இந்தப் பரந்த பிரபஞ்சத்திலுள்ள எல்லா  ஜீவர்களும் தன் குழந்தைகளாவதால், ஒரு சிசு பசி  மேலிட்டு ஸ்தன்ய  பானத்திற்காக தன்னை நோக்கி ஆவலாக ஓடி வந்து தன் மார்பகத்தை தொட்ட மாத்திரத்திலேயே, ஒரு தாய் தன் தாய்மை உணர்ச்சியின் வேகத்தால் ஆனந்த பரவசம்  அடைவது போல தன் பக்தர்கள் தன் மூல மந்த்ரத்தை உச்சரித்த மாத்திரத்திலேயே  தன் சிசுக்களாகிய அவர்கள்  மீது  எல்லை கடந்த அன்பைப் பொழிந்து அவர்களை ஆட்கொண்டு அருளும் ஜகன்மாதா.  

900.   குசாலிங்கன ஹர்ஷதா

ஒரு சிசு தன் தாயின் மார்பகத்தை ஆலிங்கணம் பண்ணிக்கொண்டே ஸ்தன்ய பானம் பண்ணுவதில் எப்படி மிகுந்த சந்தோஷம் அடைகிறதோ , அதே  போல் தன் குழந்தைகளாகிய தன் பக்தர்கள் தன் ஸ்வரூபத்தை த்யானித்துக் கொண்டே  தன் மந்த்ரத்தை ப்ரேம பக்தியுடன் ஜபித்துக்கொண்டு அளவில்லா மகிழ்ச்சி கொண்டு அவர்களை ஆட்கொண்டு அவர்களுக்கு ப்ரஹ்மானந்தமும் ஜீவன் முக்தியும் அருளும் ஆனந்த மூர்த்தி.  


(அடுத்த பதிவில் தொடரும்)    

No comments:

Post a Comment