Thursday 9 January 2014

ஸ்ரீ தக்ஷினகாளிகா ஸஹஸ்ரநாம விரிவுரை (43)



932.   கீம்கீம் ஸப்தபரா

காளியை குறிக்கும் அக்ஷரமாகிய 'க 'கார மாத்ருகை மீது காமகலையாகிய 'ஈ ' காரமும் அதன் மேல் பிந்துவாகிய அநுஸ்வாரமும் ஏறி, இவ்வாறு இந்த மூன்று மாத்ருகைகளும் சேர்ந்து கீம் என்று ஆகி அதுவும் ஸக்தி-ஸிவ தத்துவத்தை ப்ரதிபாதிக்கும் வகையாக "கீம் கீம்" என்று உருவாகும் இந்தகூட்டை ப்ரேம த்யானத்துடன் ஜபிக்கும்  பக்தர்களை ஆட்கொண்டு அவர்களுக்கு ஜ்ஞானமும் ஆனந்தமும் முக்தியும் அளித்து அருள்பவள்.

933.   க்லீம் க்லூம் க்லைம் க்லௌம் ஸ்வரூபிணீ

இந்த நான்கு பீஜங்களையும் சேர்த்து உருவாகும் மந்த்ரத்தை ப்ரேம த்யானத்துடன் ஜபிக்கும் பக்தர்களை ஆட்கொண்டு அவர்களை அநுக்ரஹிக்கும் கருணாமூர்த்தி. 

934.   காம் கீம் கூம் கைம்ஸ்வரூபா

இந்த நான்கு பீஜக் கூட்டாக அமைந்து, உருவாகும் மந்த்ரத்தை  ப்ரேம த்யானத்துடன் ஜபிக்கும் பக்தர்களை ஆட்கொண்டு அவர்களுக்கு தர்மார்த்த காம மோக்ஷங்களாகிய சதுர் வர்க்கங்களை அளித்து அருளும் பரம கல்யாண மூர்த்தி.  

935.   க: பட்மந்த்ரஸ்வரூபிணீ

யோகத்தின் அடித்தளமாகிய த்யாக  தத்துவத்தின் ப்ரதிபாதகமான ஸவிஸர்க்க ரூபமான  "க" கார மாத்ருகையான - அதாவது 'க ' என்ற பீஜத்தை தொடர்ந்து  "பட் "  என்ற  அஸ்த்ர பீஜத்தை வைத்து இவ்விரு பீஜக்கூட்டை ஜபிக்கும் பக்தர்களை ஆட்கொண்டு அவர்களுக்கு ஸம்ஸாரிகமான தளைகளை களைந்தது அவர்களை அநுக்ரஹிக்கும் ஔதார்யமூர்த்தி. 

(மேலும் கீம்  கீம்  க்லீம்  க்லூம்  க்லைம்   க்லௌம்   காம்  கீம்   கூம்  கைம்  க:   பட்   என்று சமஷ்டியாக உருவாகும்  த்வாதஸாக்ஷரீ மஹாமந்த்ரத்தை ஜபிக்கும் பக்தர்களை ஆட்கொண்டு, அவர்களுக்கு  அநுக்ரஹ நிக்ரஹ பலமும் ராஜயோக ஸித்தியும் ஜீவலோக மஹோபகார ஸக்தியும் ஜீவன் முக்தியும் அருளி மகிழும் மஹா ஔதார்யமூர்த்தி.) 

936.   கேதகீபூஷணானந்தா

தாழம்பூக்களாலான அலங்காரத்தில் பெரிதும் ஆனந்தம் அடைபவள்.

937.   கேதகீபரணாந்விதா

எப்போதுமே தாழம்பூக்களாலான ஆபரண அலங்காரத்தோடு கூடி ப்ரகாசிப்பவள்.

938.   கைகரா

ஹ்ரீம் க்ரீம் ஹூம் ஹ்ரீம் என்ற "சதுஸ்தாரி" என்ற கூட்டை ப்ரேம த்யானத்துடன் ஜபிக்கும் பக்தர்களை ஆட்கொண்டு  அவர்களுக்கு ஸக்தியும், மந்த்ரஸித்தியும், ஜ்ஞானமும், ஆனந்தமும், ஸாந்தியும் ஜீவன் முக்தியும் அருளும் பராஸக்தி மூர்த்தி.  

939.   கேஸினீ

ஏராளமாக வளர்ந்து பெருகி நாற்புறமும் வீசிப் பரவிக்கொண்டு ஸதா ஆடிக்கொண்டே இருக்கும் கேஸபாரம் கொண்ட அஸாதாரணமான பேரழகி.

940.   கேஸீ

மஹாநிர்குண ரூபிணீ ஆதலால் பரந்து விரிந்து கட்டிலடங்காத ஸதா ஆடிக்கொண்டே இருக்கும் கேஸ பாரமே தனது முக்கியமான லக்ஷணங்களில் ஒன்றாகக் கொண்ட ஆதி பராஸக்தி மூர்த்தி. 

941.   கேஸீஸூதனதத்பரா

த்வாபர யுகத்தில் உலகோரை மிகக் கடுமையாக ஹிம்சித்துக்  கொண்டிருந்த  "கேஸீ" என்ற மிகக் கொடிய ராக்ஷசனை தான் க்ருஷ்ண ரூபத்தில் ஆவிர்பவித்து அழித்து அருளிய தர்ம மூர்த்தி.

942.   கேஸரூபா

யாவராலும் தன் முழு ஸ்வரூபத்தை உள்ளபடி உணர்ந்து கொள்ள முடியாது என்ற தத்துவத்தை, நீருண்ட மேகம் போல் கரிய ஸாயல் கொண்ட தன் கேஸபாரத்தின் பளபளப்பான காந்தியின் மூலம் தன்னை த்யானிக்கும் தன் பக்தர்களுக்குத் தெரிவித்துக் கொண்டே இருக்கும்  இயல்பு கொண்டது. 

943.   கேஸமுக்தா

நிர்க்குணமும்  நிர்லிப்தமும் ஆன பரப்ரஹ்மம் எந்த விதமான கட்டுப்பாடும் அளவையும் கடந்தது (அஸிதம்) என்ற தத்துவத்தை ஸூஸிக்கும் வகையில் தேவி ஸ்ரீ தக்ஷினகாளிகையின் கேஸபாரம் ஒருவிதமான கட்டிலும் அடங்காமல் நாற்புறமும் வீசிப் பரந்து  சுழன்று சுழன்று ஆடிக்கொண்டே இருக்கும் இயல்பு கொண்டது.   

944.    கைகேயீ

ஒருகாலத்தில் கேகய  நாட்டு மக்களால் வெகு ஆர்வமாக ஆராதிக்கப் பட்டு வந்ததால் அந்நாட்டிலேயே வெகு மகிழ்ச்சியுடன் லீலாவிலாசமாக ஸாந்நித்யம் கொண்டு இருந்ததால் தேவிக்கு கைகேயி என்ற சிறப்புப் பெயர் ஏற்பட்டது.

945.   கௌஸிகீ

ஸ்ருங்கார ரசமே ஒரு தேவதையாக உருவெடுத்து வந்தாற்போல் ரஸராஜாவாகிய அந்த இன்பச்  சுவையே காளிகையின் உருவத்தில் தோன்றி தன் ப்ராணநாயகராகிய ஸ்ரீ மஹாகாலருக்குப் பேரின்ப  ஆனந்தத்தை மழை எனப் பொழிந்தருளும் ரஸ ப்ரவாஹநாயகி.

மேலும் தர்ம ஸம்ஸ்தாபனத்திற்காக நாராயணன் க்ருஷ்ணன் அவதாரம் எடுத்த காலத்தில் அவருக்கு முன் யஸோதா கர்பத்தில் உதித்தருளிய யோகமாயா மூர்த்தி. 

946.   கைரவா

ப்ரேம த்யான  பூரணமான ஜபம் செய்து லயித்திருக்கும்  பக்தனது யோகத்தில் ப்ரீதி கொண்ட பரம ஹம்ஸ  மூர்த்தி. 

947.   கைரவாஹ்லாதா

யோகியாகிய தன் பக்தனின் மனஸ்ஸாகிய குமுதத்திற்கு ப்ரியனான சந்திரன் போலுள்ள குருஸ்வரூபிணீ.

948.   கேஸரா

ஹரித்ரா குங்குமத்தில் நித்ய ஸாநித்யம் கொண்டு அதனால் தனக்கு அர்ச்சனைகள் பல புரிந்து வழிபடும் தன் பக்தர்களை ஆட்கொண்டு அருள்பவள்.

949.   கேதுரூபிணீ

ஸர்வ ஜந்துக்களிலும் அவர்களுடைய அறிவு ரூபத்தில் அமர்ந்து பக்தியாலும் ஜ்ஞானத்தெளிவினாலும் மந்த்ர ஜபத்தாலும்  யோகாப்யாசத்தாலும் புத்தி மலர்ச்சி அடைந்துள்ள தன் பக்தர்களுக்கு மந்த்ர ஸித்தியும் அதனால் ஏற்படும் ப்ரஹ்மஜ்ஞான ப்ரகாசமும் அளித்தருளி மகிழ்பவள். 

950.   கேஸவாராத்யஹ்ருதயா

தான் நிர்குண ப்ரஹ்ம ஸ்வரூபிணீ ஆனதால், வீசிப்பரந்து ஸதா சுழன்று ஆடிக்கொண்டே இருக்கும் கேஸபாரமே தன் ப்ரதான லக்ஷணங்களில் ஒன்று ஆனதால் அந்த நிலையிலேயே ஆராதிக்கப்படுவதில் பெரிதும் மகிழ்ச்சி கொள்பவள்.  மேலும் தன் பரிவார தேவதைகள் புடை சூழ, ஸ்ரீ மஹாவிஷ்ணுவால் வெகு விஸ்தாரமாக ஆராதிக்கப் படுவதில் பெரு மகிழ்ச்சி கொள்பவள். 

951.   கேஸவாஸக்தமானஸா

தன் பரிவார தேவதைகளில் ஒருவராகிய ஸ்ரீ மஹாவிஷ்ணு தன் பக்தர்களுக்குச் செய்யும் மஹோபகாரங்களைக்  கண்டு களித்து  அவர்மீது அளவு கடந்த அன்பைப் பொழிந்து, எப்பொழுதுமே அவர் தன் ஸந்நிதியிலேயே இருப்பதில் பெரு விருப்பம் கொள்ளும் மஹா வாத்ஸல்ய மூர்த்தி.  

952.   க்லைப்யவிநாஸினீ

தன் பக்தர்கள் வம்ஸவ்ருத்தியுடன்  விளங்கவேண்டும் என்று அவர்களுக்கு தடை இல்லாத ஸந்தான வ்ருத்தியை அநுக்ரஹிக்கும்  பெருவள்ளல்.

953.   க்லைம்

'க்லைம் ' என்று ஒரே பீஜத்தால் ஆன பிண்ட மந்த்ரத்தை ப்ரேம த்யானத்துடன் ஜபிக்கும் பக்தர்களை ஆட்கொண்டு அருளும் ஜகன் மாதா.

954.   க்லைம்பீஜஜபதோஷிதா 

மன்மத பீஜமாகிய 'க்லீம் 'காரத்தில் உள்ள 'ஈ ' காரத்தின் ஸ்தானத்தில் வாக்பவ மாத்ருகை யாகிய 'ஐ ' காரத்தை வைத்து அவ்வாறு  'க்லைம் ' என்று உருவாகும் ஒரே பீஜத்தாலான பிண்ட மந்த்ரத்தை அனன்ய சரணாகதி பாவத்துடனும் ப்ரேம த்யானத்துடனும் ஜபிக்கும் தன் பக்தர்களை ஆட்கொண்டு அபாரமான வாக்ஸக்தி பெருக அருளும் வாகீஸ்வரிமூர்த்தி.



(அடுத்த பதிவில் தொடரும்.)

No comments:

Post a Comment