Showing posts with label ஸஹஸ்ரநாம விரிவுரை. Show all posts
Showing posts with label ஸஹஸ்ரநாம விரிவுரை. Show all posts

Thursday 14 November 2013

ஸ்ரீ தக்ஷினகாளிகா ஸஹஸ்ரநாம விரிவுரை (6)

111. கஞ்ஜஸம்மானநிரதா

பக்தர்கள் ஹ்ருதய கமலத்தில் த்யான தாரணை பாவனைகள் வாயிலாக தன்னை ஸாக்ஷாத்கரிக்கச் செய்யும் முயற்சிகளை ஆதரித்து அவர்களுக்கு சீக்கிரமே யோகம் ஸித்திக்க அருள்பவள்.

Monday 11 November 2013

ஸ்ரீ தக்ஷினகாளிகா ஸஹஸ்ரநாம விரிவுரை (5)


90. கராமலகஸம்பூஜ்யா

குரு தத்துவமே மகத்தான ஸக்தியாக அமைந்த ஸக்திதத்துவ உபாஸனக் கிரமங்களின் விதிமுறைகள் தெளிவாக  ஸ்புரித்தல் மூலம் ஸாதகன் தேவி வழிபாட்டு சம்பிரதாயத்தில் ஸ்திரமா க நிலைத்து  உய்யுமாறு அநுக்ரஹிப்பவலள்.

Sunday 10 November 2013

ஸ்ரீ தக்ஷினகாளிகா ஸஹஸ்ரநாம விரிவுரை (4)


72. கரகாசலரூபா

நானாவித பரிமள பத்திரங்களாலும் புஷ்பங்களாலும் அணிவிக்கப்பட்டு, சந்தன கும்கும அக்ஷதைகளால் சோபனமாக்கி, பூரணபலமாகிய முழுத்தேங்காய் சிகரமாக அமைக்கப்பட்டு, தேவியின் மூலமந்திரத்தின் ப்ரஸ்தாரப் பெருக்கம் மஹா மேருவாக மூர்திகரித்ததின் சின்னமாக உபாஸகனால் ஆவாஹனம் செய்யப்பட்டு அர்ச்சிக்கப்பட்ட உத பூர்ணகும்பத்தில் பூரண ஸாந்நித்யம் கொண்டு அருள்பவள்.

Saturday 9 November 2013

ஸ்ரீ தக்ஷினகாளிகா ஸஹஸ்ரநாம விரிவுரை (3)


46. கதங்காரபராலாபா

உபாசகன் தன் மனத்தில் தான் எந்த முறையில் தேவியை வழிப்பட்டால் தேவி திருப்தி அடைவாள் என்று பூரண மனோபலத்துடன் முயன்று ஆராதித்துக் கொண்டிருக்கும் வேளையில், தேவி தானாகவே முன்வந்து அவனுக்கு பூஜாபலம் அளித்து அவனை மகிழ்விப்பாள் .

Friday 8 November 2013

ஸ்ரீ தக்ஷினகாளிகா ஸஹஸ்ரநாம விரிவுரை (2)

30. ககாரவர்ணஹ்ருதையா

மூலமந்திரத்தின் முதல், முக்கிய பீஜமாக உள்ள "ரசஜ்ஞா" எனப்படும் க்ரீம் காரத்தின் ஆத்ய மாத்ருகையாகவும் அஷ்டோத்ம், சஹஸ்ரநாமம் மந்திர கிரந்தங்களில் எல்லா நாமங்களுக்கும் ஆத்யாக்ஷரமாக உள்ள க காரத்தின் விசேஷ சக்தியுடன் ஸாந்நித்தியம் கொண்டு பிரகாசிப்பவள்.

Wednesday 6 November 2013

ஸ்ரீ தக்ஷினகாளிகா ஸஹஸ்ரநாம விரிவுரை (1)

காளி சஹஸ்ரநாம விரிவுரை

ஸ்ரீ  ஸர்வஸாம்ராஜ்ய மேதா என்று அழைக்கப்படும், முற்றிலும் 'க' காரத்தில் துடங்கும், சுந்தரிக்கு சக்தி கொடுக்கும் ஸ்ரீ தக்ஷினகாளி சஹஸ்ரநாம மாலா ஸ்தோத்திரத்தின் தமிழ் விரிவுரை.