Friday 22 November 2013

ஸ்ரீ தக்ஷினகாளிகா ஸஹஸ்ரநாம விரிவுரை (11)


206.  கதலிஹோமஸந்த்துஷ்டா

ஹோம ஆஹுதிகளில் விசேஷமாக அதிக ஸங்க்யையில் பலவகை வாழைப் பழங்களையும் வாழைப் பூக்களையும் அர்ப்பணித்தால் பேருவகை கொண்டு அருள் மழை பொழிபவள்.

Tuesday 19 November 2013

ஸ்ரீ தக்ஷினகாளிகா ஸஹஸ்ரநாம விரிவுரை (10)


188.  கபாலீ

குரு மண்டலத்தின் யோக பீடமாகிய சஹஸ்ரார அதிஷ்டானமே குரு தத்துவத்தின் வேதிகையாக இயங்க அதன் மத்தியில் ஸ்வகுரு முதல் சர்ய்யானந்தநாதர் வரை உள்ள எல்லா குருமார்களின் ஸ்வரூபிணியாக தானே பிரஹ்மரந்த்ர ஸ்தானத்தில் அமர்ந்து அங்கு வந்து அனன்ய ஸரணாகதியாக தன்னை ஆஸ்ரயிக்கும் உபாசகனைக் கை தூக்கி ஆனந்த மூர்த்தியாகவும் ஜீவன் முக்தனாகவும் ஆக்கிஅருளும் அபார தயாநிதி.

ஸ்ரீ தக்ஷினகாளிகா ஸஹஸ்ரநாம விரிவுரை (9)

167.  கவிப்ரஹ்மானந்தரூபா

பக்தனுடைய தீக்ஷண புத்தியானது மிக வீரியமாகவும் அதி தேஜஸ்சாகவும் கொழுந்து விட்டு ஜ்வலிக்கும் நிலையில் தன் க்ரியா சக்தியை பிரசரிக்கச் செய்து அவனுக்கு உடனேயே லய யோகம் சித்தித்து அதன் வாயிலாக ப்ரஹ்மானந்தப் பெருக்கு ஏற்பட்டு சமாதி நிலை நீடித்து அவன் எல்லையற்ற சுகம் அனுபவிக்க அநுக்ரஹிப்பவள்.

Saturday 16 November 2013

ஸ்ரீ தக்ஷினகாளிகா ஸஹஸ்ரநாம விரிவுரை (8)

147.  கபாலதீபஸ்ந்துஷ்டா

உபாஸகனுடைய ஸஹஸ்ரார பிரதேசத்தைத் தன் ஜ்ஞானாக்னியின் ஜ்வாலை வீச்சினால் தேஜோமயமாகப் பிரகாசிக்கச்செய்து அவனுடைய விமர்ச சக்தி வீர்யமடையச் செய்து மகிழ்பவள்.

Friday 15 November 2013

ஸ்ரீ தக்ஷினகாளிகா ஸஹஸ்ரநாம விரிவுரை (7)

129. கபந்தமாலாபரணா

மேக ஜாலங்களில் அடுக்குகள் பல வரிசைகளில் அணிகளாகத்  திரண்டு நீண்ட பெரும் மாலைகளாக உருவாக அதனை பெரும் மாலாபரணமாக அணிந்து கொண்டு மகிழும் ஆகாச மூர்த்தி.

Thursday 14 November 2013

ஸ்ரீ தக்ஷினகாளிகா ஸஹஸ்ரநாம விரிவுரை (6)

111. கஞ்ஜஸம்மானநிரதா

பக்தர்கள் ஹ்ருதய கமலத்தில் த்யான தாரணை பாவனைகள் வாயிலாக தன்னை ஸாக்ஷாத்கரிக்கச் செய்யும் முயற்சிகளை ஆதரித்து அவர்களுக்கு சீக்கிரமே யோகம் ஸித்திக்க அருள்பவள்.

Monday 11 November 2013

ஸ்ரீ தக்ஷினகாளிகா ஸஹஸ்ரநாம விரிவுரை (5)


90. கராமலகஸம்பூஜ்யா

குரு தத்துவமே மகத்தான ஸக்தியாக அமைந்த ஸக்திதத்துவ உபாஸனக் கிரமங்களின் விதிமுறைகள் தெளிவாக  ஸ்புரித்தல் மூலம் ஸாதகன் தேவி வழிபாட்டு சம்பிரதாயத்தில் ஸ்திரமா க நிலைத்து  உய்யுமாறு அநுக்ரஹிப்பவலள்.

Sunday 10 November 2013

ஸ்ரீ தக்ஷினகாளிகா ஸஹஸ்ரநாம விரிவுரை (4)


72. கரகாசலரூபா

நானாவித பரிமள பத்திரங்களாலும் புஷ்பங்களாலும் அணிவிக்கப்பட்டு, சந்தன கும்கும அக்ஷதைகளால் சோபனமாக்கி, பூரணபலமாகிய முழுத்தேங்காய் சிகரமாக அமைக்கப்பட்டு, தேவியின் மூலமந்திரத்தின் ப்ரஸ்தாரப் பெருக்கம் மஹா மேருவாக மூர்திகரித்ததின் சின்னமாக உபாஸகனால் ஆவாஹனம் செய்யப்பட்டு அர்ச்சிக்கப்பட்ட உத பூர்ணகும்பத்தில் பூரண ஸாந்நித்யம் கொண்டு அருள்பவள்.